Monday, June 1, 2020

தொடர் போராட்டங்கள் அமெரிக்க அரசை கதி கலங்க வைத்துள்ளன.



கடந்த மூன்று நாட்களாக அமெரிக்கா அதிர்ந்து போய் இருக்கிறது மக்கள் எழுச்சியால்..

###மின்னசோட்டா மாநிலத்தில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பின வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளநோட்டு பயன்படுத்தியதாக இவரை கைது செய்த போலீசார் காருக்கு வெளியே தள்ளிவிட்டு தொடர்ந்து 10 நிமிடம் இவரின் கழுத்தில் காலை வைத்து
அழுத்தி கொண்டிருக்கிறார் வெள்ளையின காவலர். என்னால் மூச்சு விட முடியவில்லை (I can't breathe) என கதறுகிறார் அவர். இதையடுத்து அந்த கறுப்பின வாலிபர் இறந்து போகிறார். இது வீடியோவாக வைரல் ஆனது.

தொடர்ந்து கறுப்பினத்தவர் மீது அமெரிக்க வெள்ளையின காவல்துறையினர் நடத்தும் அராஜகத்துக்கு முடிவு கட்ட கறுப்பின மக்கள் அணி திரண்டு வீதிக்கு வருகின்றனர். காவல்துறை கட்டிடம் தீயிட்டு கொளுத்தப்படுகிறது.
தொடர் போராட்டங்கள் அமெரிக்க அரசை கதி கலங்க வைத்துள்ளன. B
_–____---



💲நியூயார்க் நகர மேயர் கறுப்பின மக்களுக்காக போராடிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேயர் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதே சமயம் கறுப்பரான ஜார்ஜ் ஃபிரைட்டை கொன்றவரான அந்த கொடூர வெள்ளைக்கார போலீசின் மனைவி தன் கணவனை விவாகரத்து செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவும் வாழ்த்தும் குவிந்துள்ளது.
அமெரிக்க வெள்ளையின மக்கள் தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு கறுப்பினத்தவரிடமும் ஆதரவாக பேசுகிறார்கள். அலுவலகங்களில் இதுவரை காணாத இன ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் பாசிச அரசு நிலைகுலைந்து போயுள்ளது. இது வெறும் உணர்ச்சி வயப்பட்டு மக்கள் செய்யும் காரியங்கள் அல்ல. அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் சரி, பொருளாதார நெருக்கடியிலும் சரி அமெரிக்க அரசு தங்களை வஞ்சித்து விட்டது என்று.
ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள மக்கள் சுகபோகிகள் அவர்கள் அரசை எதிர்த்து அவ்வளவு சீக்கிரம் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லப்பட்டது‌.
ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பொருளாதார நோக்கங்களை மட்டுமே அல்ல. தங்களது சுயமரியாதை தாக்கப்படும் போதெல்லாம் நிறம் இனம் என்ற எல்லைகளை தகர்க்க எளிய மக்கள் தயங்குவதே இல்லை.💲

No comments: