Friday, June 19, 2020

ஒருகூரைக்குக் கீழே--கடும்

Hilal Musthafa

ஒருகூரைக்குக் கீழே--கடும்
உழைப்போர்தம் வாழ்கை!
ஓட்டைகள் உடைசல்கள்---பிடி
சோற்றுக்கும் அலைச்சல்கள்!

ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுத்தை
அறுக்குது!

வருமானம் குறையவில்லை
வரவுவகைக்குத் தடைமுமில்லை
தருகின்ற இலவசமோ
தட்டில்லை பட்டில்லை!


ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுத்தை
அறுக்குது!
(ஒரு கூரைக்...)

ரேஷன்அரசி பொங்கல்சேலை
டிவி சைக்கிளு லேப்புடாப்பு
மோசமில்லை காசுமில்லை
முழுசாத்தான நிறைவுமில்லை!

ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுத்தை
அறுக்குது!
(ஒரு கூரைக்...)

ஓட்டுப்போட நோட்டத்தாரான்
ஒவ்வொருத்தன் ஏத்தித்தாரான்
பட்டைத்தண்ணி பிரியாணிகோழி
முட்டைக்கறி கட்டித்தாரான்!

ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுத்தை
அறுக்குது!
(ஒருகூரைக்...)
கொரானாவென்ன கிரானவென்ன
கூட்டத்திறந்து டாஸுமாக்கைத்
தர்ரான்பாரு நம்மஆளு
தரையில்படுத்து உருளுறோம்பாரு!

ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுத்தை
அறுக்குது!
(ஒரு கூரைக்...)

எல்லாப்பயலும் யோக்கியனில்லை
எட்டுப்பொண்டாட்டி கட்டாமயில்லை
அள்ளிச்சுருட்டி லஞ்சம் வாங்கி
அடுக்குமாடி சேக்காமயில்லை!

ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுத்தை
அறுக்குது!
(ஒரு கூரைக்...)

நாடென்ன வீடென்ன
கூடென்ன பாடென்ன
கேடுகெட்ட. நாதாரிங்க
காசுதந்தால் தப்பில்லை!

ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுத்தை
அறுக்குது!
(ஒரு கூரைக்...)

ஏனோஇப்படி எங்கள்புத்தி
ஆகிப்போச்சு! மாறிஆச்சு!
யாசகத்தில் மோகப்பட்டு
நியாயமாச்சு! ரோஷம்போச்சு!

ஆனாலும் பிடரியிலே பஞ்சம் சவாரி
செய்யுது!
அடுத்தகட்ட வாழ்வுவந்து கழுதை
அறுக்குது!
(ஒரு கூரைக்...)


Hilal Musthafa

No comments: