Friday, June 12, 2020

குழந்தைகள் மனஅழுத்தம்

குழந்தைகள் மனஅழுத்தம்
Vavar F Habibullah

மனஅழுத்தம் குழந்தைகளுக்கு
வருமா என்று நிறைய பெற்றோர்
இப்போது கேள்வி கேட்கிறார்கள்

இரவில் தூக்கம் இல்லை
காலையில் தூங்கி எழுந்ததும்
அதிக சோர்வு. படிப்பதில்
ஆர்வம் இல்லை. ஜங்க் ஃபுட்
களில் அதிக ஆர்வம். வீட்டில்
எல்லோருடனும் சண்டை
கோபம், கடைசியில் அழுகை
இதுவே தாய்மார்கள் தங்கள்
குழந்தைகள் பற்றி தரும் ஒரு
ஜெனரல் அவுட்லைன்


சோதனை செய்து பார்த்தால்
குழந்தைகள் சிறியதொரு
மன அழுத்தத்தில் இருப்பது
தெளிவாகிறது.இவை எல்லாம்
குழந்தைகளின் மனஅழுத்தம்
தரும் அறிகுறிகளேயாகும்.
இதற்கெல்லாம் நான் ஒரு
போதும் மெடிசின்ஸ்
பிரிஸ்கிரைப் செய்வதில்லை.
காரணம்
குழந்தைகள் டிப்ரஸனுக்கு
மருந்து மாத்திரைகள் ஒரு
போதும் பலன் தராது. சில
பலன் தரும் பயிற்ச்சிகள்
போதும்.

கொரோனா நேரத்தில்
குழந்தைகள் பட்ட அவதி
சொல்லி மாளாது.பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு குறித்த
பயத்தில் நிறைய குழந்தைகள்
தடுமாறி போனார்கள்.
எல்லோரும் பாஸ் என்ற
செய்தி கவலையை போக்கி
அவர்கள் முகத்தில் சந்தோச
ரேகையை படரச் செய்திருக்கிறது.
அதிக பயம் கூட ஒரு வகை
டிப்ரஸன் தான்.
dr.habibullah
Senior Paediatrician


No comments: