கல்ப் பில் வேலை பார்த்த சமயம்..கம்பெனியில் தொழுகையை அந்தந்த நேரம் நிறைவேற்றிக் கொள்ள ஒரு தனி
இடம் இருந்தது..
லுஹர் சமயம் தொழுவதற்காக அங்கு சென்றால் டெக்னீஷியன் பலரும் தொழுது சாப்பிட்டு விட்டு சுகமாக ஏசியில் கிடந்து தூங்குவார்கள்..
நான் பலமுறை ஏக்கத்தோடு நினைப்பேன் நாம் ஏசியில் இருந்து தான் வேலை பார்க்கிறோம்.. ஆனால் ஒரு நாளும் இப்படி சாப்பிட்டு விட்டு மெய்மறந்து நிம்மதியாக தூங்க முடியவில்லையே...!?
எப்படி நம்மால் முடியும்..!?
அவர்கள் தூங்கி முடித்ததும் சாதனங்களுக்காக என்னிடம் வந்து தான் நிற்பார்கள். அதை ஆர்டர் செய்து கொடுக்க வேண்டும்..நம்ம வேலை அப்படி..எப்படி நமக்கு தூக்கம் வரும்..!?
இப்போது உகாண்டாவில் பார்க்கிறேன்..
கிராமத்தில் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை சுமந்து வந்து பிளாட்பாரத்தில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள்..
என்ன ஒரு ஜாலி சந்தோஷம்.. ஏதேதோ பேசி ஒருவர் மேல் ஒருவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்..
எதைப்பற்றியும் கவலை பட்டது போல் தெரியவில்லை..
எப்படி கவலை வரும்..!? அவர்கள் இருக்கும் இடத்திற்கு வாடகை யாரும் கேட்பதில்லையே.. பிள்ளைகளை படிக்க வைக்க ஸ்கூல் பீஸ் தேவைபடவில்லையே..
அதுபோக யாரும் யாரிடமும் சம்பளம் வாங்கவில்லையே.. அவர்கள் யாருக்கும் சம்பளமும் கொடுப்பதில்லையே..
கூடவே குழந்தைகள் இதுதான் சாப்பிடும் என்று நினைத்து நினைத்து யாரும் சமையல் செய்வதுமில்லையே... என்ன கிடைக்கிறதோ அதை எடுத்து குழந்தை சாப்பிடுகிறது..
எந்த குழந்தையும் பவுடர் பால் குடிப்பதும் இல்லை.. தாய்ப்பாலுக்கு என்றும் தட்டுப்பாடில்லை..
வானம் அழுதால்
இவர்கள் ஆனந்தமாய் குளிக்கிறார்கள்.
பசித்தால் கையில் இருக்கும் மாம்பழமும், ஆரஞ்சும் கிழங்கும் வயித்துக்குப் போதுமானது..
இவர்கள் குனிந்தால் வானம் அழுகிறது.
நிமிர்ந்தால் தான் பூமி சிரிக்கிறது.
காவல் துறை பிரம்போடு ஓடி வரும் போது இவர்களும் ஓடுகிறார்கள்.. கையில் வைத்திருக்கும் சாதனங்களின் கனம் குறைவு. அதனால் ஓடுவது கூட இவர்களுக்கு எளிதாகத் தான் இருக்கிறது..
இயற்கையோடு
ஒன்றி வாழும்
இவர்களை கொரோனா
எந்த தொந்தரவும்
செய்ய விரும்பவில்லை என்பதும் உண்மை..
நம்மால் இவ்வளவு ஜாலியாக சந்தோஷமாக இருக்க முடியுமா..!?
அப்படி சந்தோஷம் இருந்தால் அது உண்மையாக இருக்குமா..!?
டிவியில் வரும் செய்தி கேட்டு அழுகிறான்.
முகநூல் பார்க்கும்
நேரம் ஏதேச்சையாக சிரிக்கிறான்..
பொண்டாட்டி கேட்கிறார்.. "என்னை பார்த்து சிரித்தாலாவது பிரயோஜனம் உண்டு..அதை பார்த்து சிரித்து என்ன பிரயோஜனம்..!?"
பள்ளியில் படிக்கும் காலங்களில் ஞாயிற்றுக்கிழமை சினிமா பார்க்க போவோம்..
படம் முடிந்து வணக்கம் போட்டதும் தான் நாளை திங்கட்கிழமை ஸ்கூல் போகனும் என்ற
நியாபகம் வந்து
வயித்தை கலக்கும்..
அதுபோல முகநூலை
மூடி வைத்ததும் எல்லா நினைவுகளும் ஓடி
வந்து விழும்..
பிளைட் ஓடலைன்னு சொல்லி என்ன தான் நடக்கப் போகுது..!?
பள்ளியில் தொழுகை நடக்கலையே என்று வருத்தப்பட்டு என்ன நடக்கப் போகுது..!?
கொரோனா எப்போ போய் தொலையும் என்று ஆதங்கப் பட்டு என்ன நடக்கப் போகுது..!?
எதுவுமே நம்ம போடும்
பிளானில் இல்லை..
"ஊருக்கு ஏத்தபடி
உதுமான் லெப்பைக்கும்"
என்று உதுமான் லெப்பை டயலாக்கை எடுத்து போட வேண்டிய நேரம் இது..
ஓவரா சிந்தித்து
சிந்தித்து தலைவலி
தான் வரப்போகுது..
அளவோடு இருந்தா தலைமுடியாவது மிஞ்சும்..
இங்கு அனைவரும் நன்றாகவே நடிக்க
படித்து விட்டோம்..
புயல் வரும் போது மழையில் நனைந்து
பாட்டு படிக்கிறோம்..
முதல் மரியாதை படத்தில் சிவாஜி படிக்கும் பாடலை எடுத்து வேண்டுமானால் போட்டு கொள்ளலாம்..
"உள்ளே அழுகிறேன்.. வெளியே சிரிக்கிறேன்..
நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன்.."
வைரமுத்து அழகாகவே
எழுதி விட்டார்..
நானும் கூட,,
சந்தோஷங்களை பகிரத் தெரிந்தவர்களிடம் இருக்கும் சோகம்
வானம் காட்டும்
வண்ணம் போன்றது..
அதில் சோகங்களை தேடினாலும் சுகங்களை மட்டும் தான் கண்டு
பிடிக்க முடியும்..!!
என்று எழுதி
வைத்ததாக நியாபகம்..
ஆனால் கவியரசு கண்ணதாசன் ஏற்கனவே தந்த அருமையான
பாடல் வரிகளை நாம்
மறந்து விட்டது நியாபக மறதியால் தான்..!!
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும்
வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால்
ஓடுவது இல்லை
எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும்
அமைதி இருக்கும்.
உனக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு..!!"
#அவ்வளவுதாங்க..
Saif Saif
--------------------------------------
A gulf is a large inlet from the ocean into the landmass, typically with a narrower opening than a bay; though this is not observable in all geographic areas so named. The term gulf was traditionally used for large, highly indented, navigable bodies of salt water which are enclosed by the coastline
gulf countries
The Arab states of the Persian Gulf are the seven Arab states which border the Persian Gulf, namely Bahrain, Kuwait, Iraq, Oman, Qatar, Saudi Arabia and the United Arab Emirates (UAE).
No comments:
Post a Comment