ஆல்கஹால் விற்பனை
அதிகம் என்றாலும்
ஒருபுறம் போதைப் பொருள்
விற்பனையும் சூடாகவே
தொடர்கிறது.
சென்னையைப் போலவே
நாகர்கோவில்
நகரும் இப்போது
போதையில் மிதக்கிறது.
போதை மருந்து
விற்கும் தரகர்கள் தங்கள்
ரெகுலர் கஸ்டமர்களான
இளம் மாணவர்களை தேடிப்
பிடித்து நெருக்கடி நிலையிலும்
சிரமமின்றி சப்ளை செய்து
வருகிறார்கள்.சப்ளை இல்லாத
நேரத்தில் பணக்கார
மாணவர்கள் அதிக விலைக்கும்
வாங்க ரெடி
என்பதால் மார்க்கட்டில்
மருந்துக்கு நல்ல டிமாண்ட்
இருக்கிறது.
மது அருந்தும் தந்தைகளால்
போதை மருந்துக்கு அடிமையான
குழந்தைகளை தண்டிக்க முடிவ
தில்லை.கணவன் மனைவி
பிரச்னைகள், அடிதடிகள்
குடும்ப வன்முறைகள்
குழந்தைகள் மனதில்
இளமையிலேயே, வன்முறையை
தூண்டுவதால் மன அமைதி
நாடியே குழந்தைகளும்
போதைக்கு அடிமையாகி
போகிறார்கள்.
குடும்ப சூழலும் இதற்கு துணை
புரிய குழந்தைகள் திசை மாறி
போகிறார்கள். இதே சூழலில்
வாழும் குழந்தைகளும் தங்கள்
பிரச்னைகளை மனம் விட்டு
பேசுவதால் ஒருவித ‘பீர் பிரசர்’
மூலம் இணைந்து மருந்து
அடிப்பதில் கைகோர்த்து
விடுகிறார்கள்.போதையில்
சில வருடங்கள் ஊறிப்போன
குழந்தைகளை மீட்டெடுப்பது
அவ்வளவு எளிதான விசயம்
அல்ல.
பெற்றோர்களால் மட்டுமே
இந்த குழந்தைகளை திருத்த
முடியும்.குழந்தைகள் முன்
அடித்து கொள்ளாதீர்கள்.
குழந்தைகளை அனுப்பி
சிகரெட் ஆல்கஹால்
வாங்கி வரச் சொல்லாதீர்கள்.
கோபம், அடம்பிடித்தல்
தூக்கமின்மை, எதிலும்
ஆர்வமின்மை, புதிய கெட்ட
நண்பர்கள் சகவாசம்,
அதிக பணத்தேவை
கைவசம் பைக், வீணாக
ஊர் சுற்றுதல், ஆடல் பாடல்
சுமோகிங், ஆல்கஹால்
தடுமாறும் போதை,
ஏற்படும் ஆக்சிடெண்ட்...
குழி விழுந்த கண்கள்
ஒட்டிய கன்னங்கள்
அழுக்கடைந்த உடைகள்
பரட்டைத்தலை
சற்று விகாரமான முகத்தோற்றம்
சில முரண்பாடான நடவடிக்கை
ஆடிடுயூட்,பிஹேவியர்,கேரக்டர்
எல்லாம், டிரக் அடிக்ட் என்பதை
உணர வைக்கும் சில புற
வெளிப்பாடுகள்.
கொரோனாவுக்கு ஓரளவிற்கு
சிகிச்சை உண்டு. ஆனால்
போதை அடிமைகளை
மீட்டெடுக்க எந்த சிகிச்சையும்
நீண்ட நாள் பலன் தராது
என்பதை பெற்றோர் உணர
வேண்டும்.
Drug addicts are more
Prone for COVID infection
DR.HABIBULLAH
Senior Paediatrician
No comments:
Post a Comment