Friday, June 5, 2020

இயல்பு வாழ்வில்

Samsul Hameed Saleem Mohamed
இயல்பு வாழ்வில்
தான் கொண்ட சோகங்களை
புறந்தள்ளி எங்கோ
வைத்துவிட்டு....
சார்ந்தோர்களுக்கு
தன் பேச்சில், எழுத்தில்
கலகலப்பையும்
சிரிப்பையும் கலந்து
தருபவர்களின் மனோவலிமை
அளப்பரிய ஒன்று!
சோதனை அநேகங்கள்
தன்னுள் ஒளிந்திருந்தாலும்
அதை மறைத்து
பிறரை சிரிக்க வைப்பதும்,
சேர்ந்து சிரிப்பதும்
சிலருக்கு கைவந்த கலை
என்பதை விடவும் அவர்கள்
மனம் 💚 கொண்ட கலை!




லாக் டவுன இன்னிக்கு
முடிப்பாய்ங்க... நாளைக்கு
முடிப்பாய்ங்க... முடி வெட்ற
கடைய தெறப்பாய்ங்கன்னு
நெனச்சு... முடிவா....
முடிய முடிச்சதுதான்
மிச்சம்...😌
சரி.. இருக்கட்டும் போ...
சோ ராமசாமிக்கு பொறவு
அந்த மொட்டையும்
கண்ணாடியும் நமக்கு
எடுப்பாத்தான் இருக்கு!

Samsul Hameed Saleem Mohamed

No comments: