Sunday, March 7, 2021

வரன் தேடும் முஸ்லிம் பெற்றோர்களுக்கு உதவும் Siasat

 

தென்னிந்தியாவின் பிரபல உருது தினசரியான 'Siasat', ஒரு கவனிக்கத்தக்க நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் முஸ்லிம் பெற்றோர்களுக்கு உதவும் நிகழ்ச்சியே இது. இதுவரை 105-த்திற்கும் மேற்பட்ட இப்படியான நிகழ்ச்சிகளை ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் Siasat நடத்தியுள்ளது. இதன் மூலம் இலட்சக்கணக்கான பெற்றோர்கள் பயன் பெற்றுள்ளதாக கூறுகிறது இவ்விதழ்.

வரன் தேடும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் சுயவிபரங்களை (Bio-data) இந்நிகழ்வில் பதிவு கொண்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் உதவியுடன் மற்ற பெற்றோர்களுடன் நேரடியான உரையாடலாம்.

குறிப்பாக, இஸ்லாமிய திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி கொள்கின்றனர் விழா ஏற்பாட்டார்கள். வரதட்சணை குறித்த தெளிவான எச்சரிக்கை விடப்படுகிறது. வரதட்சணை  கோருவோர், கொடுப்போர் இறைவனின் முன்பு பாவம் செய்தவர்களாகவே நிற்பர் என்றும், ஹராமான இச்செயலில் இருந்து முஸ்லிம்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மேலும், இஸ்லாமிய திருமணங்களில் நுழைந்து விட்ட அனாச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வும், இஸ்லாமிய திருமணங்கள் எளிமையானதாக, நபிவழியை பின்பற்றிய ஒன்றாகவே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

ஹைதரபாத்தில் நடந்த சமீபத்திய நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெற்றோர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றதாக இவ்விதழ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

படங்கள்: சமீபத்திய நிகழ்ச்சியில் இருந்து.






செய்திக்கான ஆதாரம்:https://www.siasat.com/du-ba-du-shun-un-islamic-rituals.../

  https://www.siasat.com/du-ba-du-shun-un-islamic-rituals.../

No comments: