Thursday, March 25, 2021

கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்வது!

 


Noor Saffiya


💞 இறைசிந்தனை

 

கண்டம் விட்டு கண்டம்

தாண்டி செல்வது!

கண்மணி ஹபீபின் ஆசியுள்ளவர்க்கே!

காப்பபன் தரும் அருட்

கொடையே!

அதற்குரிய ஆரோக்யம்

இருந்தால் மட்டுமே!

அதனாலேயே பயணம்

ஓர் உன்னதமே!

 

அதில் இருக்கும் வலிகள்,

அதிகமே!

அதில் உயிர் மீட்டு நம்மில்

மீண்டும் அமைப்பதும்!

அதற்கு நாம் சொல்லும்

புகழே!

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!

 

பசி இருந்தும்,பயணம்

என சாப்பிட பயந்தே!

பார்த்து பார்த்து சாப்பிடும்

நிலையுமுண்டு!

பார்ப்பவகளிலும் நாம்

இன்முகம் ஓர் ரஹ்மத்!

பார்த்தவர் நம்மிடம் ஒர்

புன்முறுவல் பரக்கத்!

 

ஆடையினை பேணுவதும்

அதிலும் சிரமமே!

அங்கம் மறைத்து அதற்காக

குளிரும்,வியர்வையும்,

அதற்கேற்றார்போல் பாதுகாப்பதிலும்!

அல்லாஹ் நம் பேணுதலுக்கு

தந்த நிஃமத்தே!

 

சுபுஹானல்லாஹ்!

 

தொழுகைக்காக நம்மை

சுத்தம் செய்வதற்கேற்ப!

தன்னை சுத்தபடுத்த

கட்டுபடுத்துதல்!

நீர் வசதி பார்த்து பார்த்து

கவனித்தலும் அழகே!

நாயனுக்காக நாம் அதிலும்

நாதர்வழி பேணும் சிறப்பு!

 

பிள்ளைகளுக்காக கோபம்

அடக்கும்விதங்கள்!

பிள்ளை அழும் குரல்

ஒரு பக்கம்!

பேசி கொஞ்சும் மழலை

செல்வம் குரல்!

மலக்குகளின் வருகையில்

மனம் லயிப்பு!

மனம் காட்டும் விதத்தின்

அற்புதங்கள் பல!

 

சதக்காவின் வகைகள்

நமக்கு தரும்!

சந்தர்ப்பங்கள் இறைவன்

தரும் கிஃப்ட்!

வான ஊர்தியின் பயணம்

வர்ணஜாலமே!

வித விதமான மக்கள்

சந்திப்புகள்!

 

மொழி தெரியாது படும்

அவதிகளும்!

மொழி தெரிந்தும் சில

அவதிகளும்!

மன்னான் அனைத்திலும்

படிப்பினையே!

மஹ்மூதரின் நடைபயணம்

சொல்ல தேவையில்லை!

 

தாகம் இருந்தும் இல்லாது

பசித்திருத்தல்!

தேகம் இருந்தும் இல்லாது

தனித்திருத்தல்!

தவத்தின் அழகு,அருமை

தனித்துவமே!

தன்னை தான் அறிதல்

தருக்கின்றானே!

 

தத்துவங்கள் நிறைந்த

தவ வலிமையே!

தந்துள்ளானே தகையோன்

நமக்கே!

தீதாராய் அனுபவிக்கவே

வெகுதூர பயணம்!

தருபவர்க்கு வெகுமதியே

வள்ளல்ஹபீபினாலே!

 

வயதிற்கேற்ப அதன்

பலாபலன்கள்!

வள்ளலே சிரமத்திற்கு

தகுந்தமாதிரி!

சந்தோஷம் மகிழும்

சிறப்பான பயணமா!

சர்குருவின் பொருட்டாலே

செல்வந்தர்களாக!

 

இப்பயணத்திற்கு காரணமாய்

இருப்பவர்கள்!

இதற்காக உழைத்தவர்கள்

துஆ கேட்டவர்கள்!

இன்னும் நல்ல எண்ணங்கள்

கொண்ட நெஞ்சங்கள்!

இதில் மனம் லயித்து

அனுப்பிய உண்மை!

 

உம்மத்துமார்கள்

யாவர்க்கும்!

உத்தம திருதூதர்

பொருட்டாலே!

உள்ளத்தின் எண்ணம்

யாவும் ஈடேற்றமாக்கி!

உடையோனுக்கு செய்த

பாவம் மன்னித்து!

 

பிழைகள் பொறுத்து,

குறைகள் மறைத்து!

பற்பல குற்றங்களையும்

அழித்துவிடுவான்!

அழகையும்,அறிவோடும்,

ஆற்றலோடும் தந்து!

அருள் வரமாய் மக்கட்

செல்வம்,மனைசெல்வம்!

 

நிம்மதியோடு அமல்

செய்ய பணசெழிப்பும்!

வஞ்சகமிலா ஆட்களின்

நட்பையும்!

வஞ்சனை,போறாமையிலா இல்லிடமும் தந்து!

இல்லறம் நல்லறமாய்

எல்லா சந்தோஷமும்!

இறைரசூல் ஹுப்போடு

ஆள,வாள,அனுபவிக்க

கிருபைசெய்வானாக!

 

ஒரு பொண்ணும்,ஒரு

மாப்பிள்ளையுமாய்!

ஒன்றாயிணைந்து இம்மை,

மறுமை வாழ்விலும்!

மஹமூதரின் கரம்பற்றும்

கண்குளிர்ச்சியான!

மக்கட் செல்வங்களுடனும்!

தாய்,தகப்பனுடனும்!

உடன்பிறப்புடனும்!

உற்றார்,உறவினருடனும்!

 

ஒன்றாய் பாவமிலாத

பரிசுத்த ஈமானோடு!

ஒவ்வாத ஜென்னதுல்

ஃபிர்தவ்ஸிலிருக்கவும்!

நம் வஃபாத் நமக்கு தெரிந்தே ஹபீபே!

நம் வருகை,இஸ்ராயில்

புன்முறுவல் பார்வை!

 

புண்ணியம் சேர்க்கவே

பூமானின் அழகுவதனம்!

பூவும்,கஸ்தூரி மணம்

கமழும் வாசம் நுகர்ந்து!

பூ மண்ணும் பூத்த

முறுவலுடன் அழைக்க

பூ மண்ணில் புதுமன

தம்பதிகளாயிருக்க!

 

எல்லாம் வல்லிறைவன்

அருள்வரம் தந்த பயணமாய்

அமைத்தருள்வானாக!

ஆமீன்.யா ரப்பே!

நம் ஹபீபின் பொருட்டாலே!

 

அழகிய ஹக் திக்ரும்

அஹ்மதரின் ஸலவாத்

துதித்து நாவினில்

நனைவோம்.!

 

ஆமீன் !!

யா ரப்பே !!

என் ஹுப்பே !!

 

ஸல்லல்லாஹு

அலா முஹம்மத்

ஸல்லல்லாஹு

அலைஹிவ

வஸல்லம்💞

 

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: