மயிலாடுதுறையின்
இதயமாக
இருக்கும்
இடமான
பட்டமங்கலத்
தெரு மற்றும் காந்திஜி ரோடு
ஆகிய சாலைகள் சங்கமிக்கும் இடத்தில்
கம்பீரமாக எழுந்து நிற்கிறது மயிலாடுதுறை
மணிக்கூண்டு.
மயிலாடுதுறை
சார்ந்த ஒரு வால்போஸ்டர் அடித்தாலும்,
வாட்ஸ்
அப் குழு அமைத்தாலும்,
ஃபேஸ்புக்
குழு அமைத்தாலும்,
பேனர் வைத்தாலும்
மண்ணின்
அடையாளமாக
மணிக்கூண்டை
வைக்க வேண்டுமென்று
அமைப்பவரின்
மனதில்
மணியடிக்கும்.
பெரு வணிகர்களின்
வியாபார
ஸ்தலம்,
சிறு வணிகர்களின்
விற்பனை
இடம்,
தெரு வியாபாரிகளின்
வாழ்வாதாரம்.
பொதுமக்களுக்கு
அனைத்தும்
கிடைக்கும்
அமுதசுரபி
அந்த இடம்.
திருவிழாக்காலங்களில்
தூங்காநகராக
காட்சியளிக்கும்.
ஏனைய காலங்களில் கூட்டம்
தாங்கா
நகராக காட்சியளிக்கும்.
1943 இல்
இங்கிலாந்து படைகள் ஹிட்லர் படையை
எதிர்த்து டுனீஷ்யாவை வென்றதன் அடையாளமாக கட்டப்பட்டது இந்த மணிக்கூண்டு.
68 ஆண்டுகளாக
நேரத்தை மட்டும் காட்டவில்லை.
மத நல்லிணக்கத்தையும் காட்டுகிறது.
மயிலாடுதுறை
மாவட்டமானது.
தானாகவே
மணிக்கூண்டு அதன் அடையாளமானது.
வரலாற்றுப்
பதிவு
வணிகப்
பதிவு
வாழ்க்கைப்
பதிவுகொண்ட இவ்விடத்தை,
ஓவியமாக
பதிவு செய்ய இயலுமா? என்று
மலைத்துப் போயிருந்தேன்.
நண்பர்
திரு சரவணன் அவர்கள் வலியுறுத்தினார்கள்
வரைந்துவிட்டேன்...
அப்போழுது
அந்த மணிக்கூண்டை கட்டிட நீடூர் பெருவணிகர்
சி ஈ அப்துல்காதர் அவர்களுக்கு
ரூபாய்
8 ஆயிரம்
செலவானது.
இப்பொழுது
இந்த மணிக்கூண்டை வரைய எனக்கு
4 மணி நேரம் செலவானது.
நன்றியுடன்,
🚩ஏ முருகன்.🚩
No comments:
Post a Comment