அன்பு முகநூல் நண்பர்களே! சகோதர
சகோதரிகளே!
தாருல்
பயான் -தெளிவுரை இல்லம் சார்பில் நாள்தோறும் Cisco Webex செயலியின் மூலம் ஆற்றிவரும் திருக்
குர்ஆன் விரிவுரை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக
06-03-2021 சனிக்கிழமையன்று
நடைபெற்ற திருக்குர்ஆனின் அத்தியாயம்
அத் தவ்பாவின் வசனங்கள் 25&26 ஆகியவற்றின் விரிவுரை இது.
இந்த இரு வசனங்களில் இறைவன்
நம்பிக்கையாளர்களுக்கு அறப்போராட்டங்களின் போது தான் செய்த
உதவியைக் குறிப்பிட்டு விட்டு,
ஹுனைன்
போரின் போது முதலில் முஸ்லிம்களுக்குத்
தோவ்வியைத் தந்தது ஏன், பின்னர்
எதனால் எப்படி அதில் அவர்களுக்கு வெற்றியளித்தான்
எனபதைக் குறிப்பிடுகிறான்.
மேலும்
முஸ்லிம்கள் போரில் தோல்வியுற்றுப் பின்வாங்கிய
போது அவர்களுக்குத் துணிவையூட்டும் விதத்தில் அண்ணலாரே களமிறங்கி போர்ப்பரணி பாடியபடி வீரத்துடன் போரிட்டார்கள் என்பதையும்
இறைவன் வானவர்களையும் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிடுவதற்காக அனுப்பி
அவர்களுக்கு உதவினான் என்பதையும் இந்தக் காணொளி விளக்குகின்றது.
இந்த விரிவுரையை விரும்பினால் லைக் செய்து பின்னூட்டத்தில்
உங்கள் ஐயங்களைக் கேட்பதுடன் பழபிறருக்கும் பகிர்ந்து அல்லாஹ்விடம் நன்மைகளைப் பெற்l must be in in inபெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
இவண்
தாருல்
பயான்
அன்பன் காஞ்சி அப்துல் ரவூப் பாகவி
No comments:
Post a Comment