Monday, March 15, 2021

*💞"விண்ணில் வந்த நிலவே"*

 

Noor Saffiya

*💞"விண்ணில் வந்த நிலவே"*

*பாடல் வரிகள்: நூர் ஷஃபியா*

                              *காதிரியா*

*பாடியவர்         : ஆஷீகே ரஃபீக்💞*

➖🌹

விண்ணில் வந்த நிலவே

என்மனதில் நிறைந்த ஹபீபே

மண்ணில் வந்த ஒளியே

என்உயிரில் கலந்த ரசூலே

 (விண்ணில்)

தவத்தில் உள்ள ஹுப்புடனே

கண்ணில் வரும் திருக்காட்சியை கண்டேனே

முத்தே முஹம்மதே...

முஸ்தபா.. முர்தழா.. ரஹ்மதுலில் ஆலமீன் ராஹதுல் ஆஷிகீன்

(விண்ணில்)

ஏங்கிருந்த உள்ளம்

நபியை கண்ட பின்னே

கல்பில் ஒளி நிறைந்திட்டது

ஆனந்தத்தின் எல்லையில்

அந்த நேரம் நாவு

ஸஹாதத்து கலிமா சொல்லும்

விழிப்பினில் காட்சியும்

வித்திட்ட இறையச்சம்

ரப்பே நீ தந்தாய்

அந்த நிலையினில் கல்பில் உதித்திட்ட பாடலை ரஹ்மான் நீ வெளியாக்கினாய்

ரப்பே.. ரஹீமே..

ஹன்னான்.. மன்னான்.. கரீமே.. ஹலீமே..  அர்ஹமர் ராஹிமீன்

(விண்ணில்)

'நூர் ஷஃபியா' ஹுப்பினால்

பாவம் பிழை பொருத்து

ஆஷிகீனில் சேர்த்தாயே

பொன்னழகு மின்னும் இறை ரசூல் அருகில் நெருக்கத்தில் வைத்தாயே

குயில்களின் ஓசையினில்

அழகிய இறைமறை

கல்பினில் பதித்தாயே

குவ்வத்தில் திழைத்திட்டு

குத்ரத்தின் மகிமையால்

குரலினை தருவாயே

நூரே.. நபியே..

முஜம்மிலே.. முபஸ்ஸிரே.. ரசூலே.. ஹபீபே.. ஸெய்யிதில் முர்ஸலீன்

(விண்ணில்)

ஷெய்கினால் சிந்தனையில்

இல்மென்னும் ஞானம்

தெளிவுற செய்தாயே

சிரசினில் ஏற்று கற்றுணர்ந்ததாலே

பேரின்பம் அளித்தாயே

வானமும் பூமியும்

இடையில் படைத்த

யாவும் பாமாலை ஆக்கிடுதே

வல்லவனின் நல்லருளும்

நாதரின் நல்வரமும்

நாளும் கிடைத்திடுமே...

ஹக்கே.. ஹல்கே....

யா லத்தீப்.. யா ஃப்த்தாஹ்... யா ரஜ்ஜாக்.. யா வக்கீல்.. யா ரப்பல் ஆலமீன்

(விண்ணில்)

குழுமிலுள்ள ஆஷிகீன்கள்

நல்லமல்கள் செய்ய ஒன்றாய் இணைத்தாயே

எழுத்தழகு மின்னும் கவிதைநயம் மிளிர கருத்தில் மலரசெய்தாயே

குரல்களின் ஓசையையும்

அழகிய கவிதையையும் அதிகப்படுத்துவாயே

கோமானே உந்தன் அருள் லிகாவெனும் சந்திப்பை இக் குழுமில் தருவாயே

மஃபூபே.... சுப்ஹானி

மஃஷுகே ரஹ்மானி.. ஹிந்தீலே நூரானி.. கௌதுல்.... அஃலமே

விண்ணில் வந்த நிலவே

என்மனதில் நிறைந்த ஹபீபே

மண்ணில் வந்த ஒளியே

என்உயிரில் கலந்த ரசூலே

தவத்தில் உள்ள ஹுப்புடனே

கண்ணில் வரும் திருக்காட்சியை கண்டேனே

முத்தே ............ ....!!

முஹம்மதே.... ...!!

https://www.facebook.com/noor.saffiya.7/videos/172359213956885

No comments: