Thursday, March 4, 2021

புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாம் ஷேக் ஷுரைமின் குத்பா பேருரையில் இருந்து சிதறிய சில முத்துக்கள்...

 

🌹 புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாம் ஷேக் ஷுரைமின்  குத்பா பேருரையில் இருந்து சிதறிய சில முத்துக்கள்...

🍁விலைகள் உயர்ந்து விட்டன.

🍁பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்.

🍁மஸ்ஜித்கள் காலியாகி விட்டன.

🍁அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப்பட்டன.

🍁திருடர்கள் நியாயம் பேசுகிறார்கள்.

🍁முஜாஹித்கள் வழிநடத்தலில் அநியாயம் செய்கிறார்கள்.

🍁விபச்சாரம் ஹலாலாக்கப் பட்டு விட்டது.

🍁திருமணம் முடிப்பது இயலாத ஒன்றாக மாறி விட்டது.

🍁பெண்கள்  ஆண்களை நிர்வகிப்பவர்களாக மாறி விட்டார்கள்.

🍁முஸ்லிம்களுடைய பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.

🍁ஏழைகள் குடையின்றி மழையில் தவிக்கின்றனர்.

இறுதி நாளின் பெரிய அடையாளங்களில் இன்னும் கொஞ்சம் தான் எஞ்சியுள்ளது.

எனவே துரிதமாக தௌபா செய்து கொள்ளுங்கள்.

ஓட்டைப் பைகளில்  நன்மைகளை நிரப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள் .

அப்படியென்றால் என்ன?

💚 அழகாக வுழு செய்கிறீர்கள்.

ஆனால். .....

தண்ணீரை வீண் விரயம் செய்கிறீர்கள். இது

"ஓட்டைப் பை"

💚 ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள்.

ஆனால்.......

அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்துகிறீர்கள். இது

"ஓட்டைப் பை"

💚இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்று ரப்பை வழிப்படுகிறீர்கள்.

ஆனால்........

குடும்ப உறவை துண்டித்து வாழ்கிறீர்கள். இது

"ஓட்டைப் பை"

💚நோன்பு நோற்று பசி தாகத்தில் பொறுமையோடு இருக்கின்றீர்கள்.

ஆனால். ......

பிறரை ஏசி, திட்டி சபிக்கிறீர்கள். இது

"ஓட்டைப் பை"

💚ஆடையை மறைத்து அபாயாக்களால் போர்த்துகிறீர்கள்.

ஆனால்........

அதையும் தாண்டி நறுமணம் கமழ்கிறது. இது

"ஓட்டைப் பை"

💚விருந்தினரை கண்ணியப் படுத்தி உபசரிக்கிறீர்கள்.

ஆனால்.....

அவர்கள் சென்ற பின் அவர்களைப் பற்றி குறை கூறி புறம் பேசுகிறீர்கள். இது 

" ஓட்டைப் பை"

இறுதியாக சொல்கிறேன்

ஓட்டைப் பைகளில் உங்கள் நன்மைகளை நிரப்ப வேண்டாம். ஏனெனில், சிரமப்பட்டு அவைகளை சேகரிக்க,மறுபுறத்தால் இலேசாக அது விழுந்து விடும்.

 *ஆச்சரியம்* .......

ஹஜ், உம்றா செய்ய முடியாது. காரணம் அதன் செலவுகள் அதிகம். ஆனால்

நல்ல கால நிலைகளை தேடி உள் நாட்டுக்குள்ளும், வெளி நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல முடிகிறது.

உழ்ஹிய்யா கொடுக்க முடியாது. விலை அதிகம். ஆனால்

அதிக விலையுள்ள i phone , ஆடம்பர பொருட்களை வாங்க முடியும்.

நாளாந்தம் சமூக வலைத்தளங்களில் நூறு செய்திகளை வாசிக்க முடியும்.ஆனால்

குர்ஆனின் பத்து ஆயத்துக்களை  ஓத நேரமில்லை.

யா ரப்பே! எனக்கும் நம் சமுதாயத்துக்கும் மன்னிப்பையும் நேர்வழியையும் தந்தருள்வாயாக... ! ஆமீன்




No comments: