Thursday, September 21, 2017

இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறந்த விதம்

தக்கலை கவுஸ் முஹம்மத்



புனித மக்காவில் ஓரி​றைக் கொள்​கையை ஏற்​றுக் கொள்​ளாத மக்​க​ளால் எண்​ணற்ற தொல்​லை​க​ளுக்​கும் துய​ரங்​க​ளுக்​கும் ஆளா​னார்கள் அண்​ண​லார் நபி ஸல் அவர்கள் மெக்கா வாழ் மக்​கள் நபிகளாரை கொலை செய்​ய​வும் துணிந்​து​விட்ட நேரத்​தில்,​ மெக்​காவை விட்டு அவர் மதி​னா​வுக்​குச் செல்​லப் புறப்​பட்ட காலத்தி​லி​ருந்து தொடங்​கு​வதே ஹிஜிரி ஆண்டு. இது “ஹிஜ்​ரத்’ ​(புனி​தப் பய​ணம்)​ என்​னும் அர​பிச் சொல்லி​லி​ருந்து பிறந்த வார்த்​தை​யா​கும்.

ஹிஜிரி ஆண்​டின் முதல் மாதமே “முஹர்​ரம்’ என்​ப​தா​கும். இத்​திங்​க​ளின் பத்​தாம் நாளை “ஆஷுரா தினம்’ என்​றும்,​ “முஹர்​ரம்’ என்​றும் கூறு​வர். இத்​தி​னத்தை பண்​டி​கை​யா​கவோ,​ பெரு​நா​ளா​கவோ கொண்​டாட மற்றும் உடலை வருத்தி ஷியாக்கள் செய்கிற எவ்வித செயல்களுக்கும் மார்க்கம் அனுமதிக்கவில்லை இந்​நா​ளில் “நோன்பு’ நோற்​பதே சாலச் சிறந்​தது.
உலக மக்களிடையே புது வருடப்பிறப்பு ஜனவரி மாதத்தின் முதல்நாள், பல்வேறு களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நவீன உலகில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் இருக்கின்றதைக் காண முடிகின்றது. இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது என்பது நமது மார்கத்தில் இல்லாத ஒன்று , நபி ஸல் அவர்கள் எவ்வித வாழ்த்துக்களையும் யாரிடமும் பரிமாறிக் கொண்டதில்லை என்பதை புரிந்து கொண்டால் இது போன்ற வாழ்த்து பரிமாற்றம் தேவையற்ற ஒன்று என்பதை புரிய முடியும் , தவிர்த்துக் கொள்ளமுடியும் இன் ஷா அல்லாஹ்
முஹர்ரம் மாதம் ! புனிதமான மாதங்களில் ஒன்று !
முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக் கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
“ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).
நிச்சயமாக வானங்கள் பூமிக்கு படைக்கப்பட்ட நாள் முதலே காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வரக்கூயவை. அவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ் ஸானி)வுக்கும் ஷஃபானுக்கும் மத்தியிலுள்ளதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபீ பக்ரா (ரலி). ஆதாரம்: புஹாரி).
முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் நோற்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.
ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), “சென்றவருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி),
நூல்: முஸ்லிம்.
ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே
.
“மூஸா (அலை) அவர்களைப் பெருமைப்படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்” எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், “எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம்
இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9(எவ்ம தாசிஆ) மற்றும் 10(எவ்ம ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் நோன்பை முஸ்லிம் உலகம் நோற்று வருகின்றது.
அண்​ண​லார் மறைந்​த​தற்​குப் பிறகு,​ சில ஆண்​டு​கள் கழித்து “கர்​பலா’ என்​னும் செருக்​க​ளத்​தில்,​ அண்​ணல் பெரு​மா​னா​ர​வர்​க​ளின் திருப்​பே​ரர் ஹு​ûஸன் ​(ரலி)​ என்​பார்,​ இஸ்​லா​மிய மக்​க​ளாட்​சியை ஏற்​ப​டுத்​து​வ​தற்​காக நடந்த போரில் உயிர் நீத்த நாளும் முஹர்​ரம் பத்​தாம் நாளே!​
அண்​ணல் நபி ​(ஸல்)​ அவர்​கள் பிறப்​ப​தற்கு முன்பு,​ ​(பல நூற்​றாண்​டு​க​ளுக்கு முன்)​ இந்த முஹர்​ரம் பத்​தாம் நாளில் பல வியப்​பு​றும் அற்​பு​தங்​கள் நிகழ்ந்​த​தாக வர​லாறு சொல்​கி​றது. ​
இந்​நா​ளில்,​ முதல் மனி​தர் ​(முதல் இûறைத்​தூ​தர்)​ ஆதம் ​(அலை)​ அவர்​க​ளின் பாவ மன்​னிப்பை இறை​வன் ஏற்று,​ இவ்​வு​ல​கின் கண் அவரை நிலைப்​ப​டுத்​தி​னான்.
இறைத் தூதர் நூஹ் ​(அலை)​ அவர்​கள் பல ஆண்​டு​கள் தொடர்ந்து சத்​திய அறி​வு​ரை​களை எடுத்​தோ​தி​யும்,​ அத​னைச் செவி​ம​டுக்​காது எதிர்த்த மக்​களை அழித்தொழிப்​ப​தற்​காக இறை​வன் தோற்​று​வித்த மாபெ​ரும் பிர​ள​யத்தி​லி​ருந்து காப்​பாற்​றப்​பட்டு இறைத்​ தூ​தர் நூஹ் அவர்​க​ளின் மரக்​க​லம் அதே தினத்​தில்​தான் “ஜூதி’ என்​னும் மலை​யில் வந்து நின்​றது.
இப்​பொன்​னா​ளில்​தான் இறைத் தூதர் யூனூஸ் ​(அலை)​ அவர்​க​ளின் குற்​றத்தை இறை​வன் மன்​னித்து,​ மீன் வயிற்றி​லி​ருந்து விடு​வித்​தான்.
ஏறக்​கு​றைய ஐயா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் வாழ்ந்த இறைத்​தூ​தர் இப்​ரா​ஹீம் ​(அலை)​ அவர்​க​ளும்,​ அவ​ரைப் பின்​பற்​றிய மக்​க​ளும்,​ ஆட்​சி​யில் இருந்த கொடிய மன்​ன​னா​கிய பிர் ஹெüனால் துன்​பு​றுத்​தப்​பட்​ட​னர். பின் அவ​னு​டைய இரும்​புப் பிடியி​லி​ருந்து விடு​பட்டு,​ நலமே “நைல்’ நதி​யைக் கடந்​த​னர். பிர் ஹெள​னும்,​ அவ​னு​டைய படைப் பட்​டா​ளங்​க​ளும் கடலில் மூழ்​க​டிக்​கப்​பட்​ட​னர். இந்​நி​கழ்​வு​கள் யாவும் முஹர்​ரம் மாதம் பத்​தாம் நாளி​லேயே நடந்​த​தாக ​ வல்​லு​நர்​கள் அறி​விக்​கின்​ற​னர்.
இத்​த​கைய அரும் பெரும் வியப்​பு​றும் விந்​தை​கள் நிகழ்ந்த சம்​ப​வங்​கள் யாவும் முஹர்​ரம் மாதம் பத்​தாம் நாளில் நிகழ்ந்​துள்​ளன என்​ப​தைக் கண்​ணு​றும்​போது,​ வர​லாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நாளாக இருக்கிறது
ஹிஜ்ரி 1439, முஹர்ரம் 1-ம் தேதி (21.09.2017) இன்று வியாழக்கிழமை ஆகும் . இன்ஷாஅல்லாஹ் வரும் 29, 30 2017) வெள்ளி , சனிக்கிழமை முஹர்ரம் 9, 10 ஆகும். இந்த இரண்டு தினங்களில் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். நாம் அனைவரும் இந்த சுன்னத்தைக் கடைபிடிப்பதோடு இந்த மாதத்தின் முதல் பத்து நாளில் மாமிசம் சாப்பிடக் கூடாது போன்ற பல மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து அல்லாஹ்வின் நல்லருள் பெறுவோமாக!அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்..

தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments: