Sunday, September 3, 2017
கவியுள்ளம் ....!
நீலவானத்து சிறு நட்சத்திரங்களும்
அடர்வனத்து பெரு மரங்களும்
பூங்காவின் மலர் மொட்டுக்களும்
மலர்ந்து இதழ் விரித்த பூக்களும்
அலைகடலின் பாய் மரக்கலங்களும்
நீள் நதியின் துள்ளும் மீன்களும்
அதிகாலைப் நுனிப்புல் பனித்துளியும்
சூர்யோதைய கதிர் வெம்மையும்
பொன்னந்திமாலை இளம் தென்றலும்
குளிரிரவின் விண் நிலவும்
சூல்கொண்ட கரு மேகமும்
புதுமழையின் மண் வாசமும்
அடைமழையில் நனையும் சிறுநடையும்
வயலில் தலைசாய்ந்த நெற்கதிரும்
சிறுமழலை பேசும் மொழியும்
பெற்றதாயின் நேச வாசமும்
தந்தையாரின் மந்திர வாசகங்களும்
அதன்படி நின்று பெறும் பலனும்
இருப்பதை பகிர்வதில் கிட்டும் திருப்தியும்
இறைதியானத்தில் பெறும் அமைதியும்
இன்னும் பலவற்றையும்
பார்த்தும் கேட்டும் அனுபவித்தும்
குதூகலிக்கிறது
கவியுள்ளம்
ராஜா வாவுபிள்ளை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment