Sunday, September 10, 2017

கம்பாலா என்ற பெயர் உகாண்டாவின் தலைநகருக்கு எப்படி வந்தது?

ராஜா வாவுபிள்ளை
ஆப்ரிக்கா இயற்கையின் இருப்பிடம் என்பது யாவரும் அறிந்தது. வானவிலங்குகளும் ஏராளம் உண்டு. இயற்கை எழிலுக்கு பெயர்போனது உகாண்டா. அதனால்தான் கழிந்த நூற்றாண்டில் உகாண்டா வந்த பிரித்தானிய பிரதமர் சர்ச்சில் இயயற்கை எழிலில் மயங்கி "உகாண்டா ஆப்ரிக்காவின் முத்து" என்று மனமார வாழ்த்தினார்.
அதிலுள்ள தலைநகரம் கம்பாலா அழகான ஏழு மலைகுன்றுகளின் மீது அமையப்பெற்றிருக்கிறது.
இந்த மலைகளின் இயற்கை சூழலில் இயற்கையாகவே இம்பாலா என்று வட்டார லுகாண்டா மொழியில் அழைக்கப்படும் பெரியவகை மான்
இனங்களில் ஓன்று அதிகமாக வசித்து வந்தன.

இம்பாலா மான்கள் வசிக்கும் மலை - லுகாண்டா மொழி பெயர்ப்பு - 'கஸோசீ கா இம்பாலா' - என்பது நாளடைவில் மருவி 'கம்பாலா ' என்றானது.
எண்பதுகளின் தொடக்கத்தில் கம்பாலாவின் புறநகர் பகுதிகளில் இம்பாலா மான்கள் இருந்தன நானும் பார்த்திருக்கிறேன். உள்ளூர் மக்கள் கூட்டமாக தாரை தப்பட்டை அடித்து வேட்டையாடி இம்பாலாவை கொண்டுவருவதையும் பார்த்திருக்கிறேன். புகைபோட்டு பதப்படுத்திய இம்பாலா மான் இறைச்சியை நண்பர்கள் நெருங்கிய உள்ளூர் நண்பர்கள் கொண்டுவந்து தந்திருக்கிறார்கள் சமைத்து சாப்பிட்டும் இருக்கிறேன்.
இப்போது மக்கள்தொகை கூடியும், அளவுக்கு அதிகமான வாகனங்களும் நிறைந்து, தொழில்மயமாகி வரும் கம்பாலாவில் இயற்கையில் வாழும் விலங்குகளை காணக் கிடைப்பதில்லை.
உகாண்டா நினைவுகள் ....!
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை 

No comments: