பள்ளி படிப்பு முடியும் வரை ஆங்கிலத்தில் பேசுவது என்பது சிரமமான காரியமாக இருந்தது. அதுவும் லஞ்ச் நேரத்தில் நடைபெறும் கிராம்மர் கிளாசை போதுமான அளவு கட் அடித்துவிடு்வோம். கிராமர் என்றாலே வேப்பங்காய் போல கசக்கும். கல்லூரி படிக்கும்போது ஆங்கில வகுப்பெடுக்க கர்நாடகாவிலிருந்து கிரிஷா (ஆண் 😀 ) என்ற ஆசிரியர் வந்தார். அவருக்கு தமிழ் தெரியாது. அதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டியிருந்தது. "நீங்கள் தவறான ஆங்கிலத்தில் பேசினாலும், தைரியமாக பேசுங்கள். அப்போது தான் உங்களால் நன்றாக பேச முடியும்" என்று சொல்லிக் கொடுத்தார்.
அதுவரை வேப்பங்காயாக கசந்துக் கொண்டிருந்த க்ராம்மரை மிக எளிதாக கற்றுக் கொடுத்தார். இப்போது வரை "ஓரளவு" கிராம்மருடன் நான் ஆங்கிலம் பேசுவதற்கு அவர் ஒரு முக்கிய காரணம். மேலும் அவர் ஒரு நாத்திகர், எல்லா வகுப்பிலும் பத்து-பதினைந்து நிமிடங்கள் பொதுவான விசயத்தைப் பற்றி பேசுவோம், "கடவுள் நம்பிக்கை" பற்றிக் கூட விவாதித்திருக்கிறோம். அவர் விடைபெறும் போது நண்பர்கள் இணைந்து அவருக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு குர்ஆனை பரிசளித்தோம். வாழ்வில் மறக்க முடியாத ஆசிரியர்களில் அவரும் ஒருவர். We Miss You Sir!
அடுத்து இணைய குல ஆசான், கூகுள்!!!
இணையத்தில் இணைந்தது முதல் இன்று வரை தொடர்ந்து பல பாடங்களை கற்று தரும் ஆசிரியர். அவ்வப்போது செலவுக்கு பணத்தையும் அள்ளித் தருபவர். 😁
இவர்கள் இருவருக்கும், இன்னும் பல சந்தர்ப்பங்களில் பல பாடங்களை கற்றுத் தந்த, தந்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!!
Abdul Basith
No comments:
Post a Comment