பல்லவி
சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா
உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…
கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…
கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…
( சாமத்து ரோசாப்பூவு)
அனுபல்லவி
முத்து முத்தாப் பேசினீயே
முத்தங்கள் அள்ளி வீசினீயே
கொத்துமல்லி கொண்டையிலே
கோலமிட்டு வாழ்த்துனீயே
உன்னயெண்ணி உள்மூச்சி வாங்குதையா
என்னுள்ளம் அலைபாய்ந்து ஏங்குதையா
கண்ணுறக்கம் இல்லாம நெஞ்சு துடிக்குதையா
நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு
பஞ்சா வெடிக்குதையா…
(சாமத்து ரோசாப்பூவு)
சரணம்
பட்டு மெத்தயில பாய்விரிச்சி
பால் நிலவு காயுதையா…
சொப்பனத்தில் நீயும் வந்தா
பாவி மனம் வேகுதையா…
உன்மடியில் என்னுசுரு போகட்டுமே…
கோடியுகம் நம் காதல் வாழட்டுமே…
அக்கம் பக்கம் பாத்துக்கிட்டு ஆசைகள் கூடுதையா…
தென்றலோடு பேசிக்கிட்டு தாகமும் தீருதையா…
(சாமத்து ரோசாப்பூவு)
நன்றி http://tamilnenjam.com
No comments:
Post a Comment