தமிழ் பிரியன் நசீர்
அகல எல்லை
நீளங்களையும்
அங்குல மங்குலமாய்
உலகை அளவெடுத்து
பகலும் இரவும்
நூல்கோர்த்துப்
பார்த்துப் பரிணாம
ஊசியதால் நெய்து
பல வண்ண ஆடை
அணிகலன்களைப்
பரப்பி மேல் பூமிப் போர்த்தி
நலம் செய்வோன் நாமே என்றான்.!!
புகழையும் பெயரையும்
பிச்சைக் கேட்டு
போதைத் தட்டுக்களைக்
கையிலேந்தி........
நகலையும் மெய்யென்றே
உரைத்தவனும்.........
நாகரீகக் கோமாளிபோல்
வேடமணிந்தான்...!!
ஒளி துழைக்கும்
தந்திரம் கண்டான்
உயரம் சென்று
நிலவையும் அளந்தான்
வகை வகையாய்
ஆடைகள் நெய்யும்
வல்லரசு........
தையற்காரன்.....
வறுமையெனும்
கிழிசலை மட்டும்
தைத்திட ஏனோ
அரவே மறந்தான்..!!
நீ மறந்த கிழிசல் மறைக்க
எள்ளியோர் சொல்லூசித் தாங்கி
தீ எறிக்கும் வறுமைக் கிழிசலை
தினந்தோறும் நெய்து கொள்ள
சீர்கெட்டு..........
திரிந்தே நொந்தோம்
சிதை மூட்டாமல்
கருகியே வெந்தோம்..!!
தமிழ் பிரியன் நசீர்
No comments:
Post a Comment