மீண்டும் பூக்கும்
by கஜினி அய்யூப்“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.
இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்” , சல்மாவின் “மூன்றாம் ஜாமங்களின் கதை” நான் வாசித்து முடித்த இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் என்பது நினைவு!?
பொதுவாக புத்தகம் வாசிப்பது என்பது இப்போது மின்மீடியாக்கள் ஆக்ரமிப்பில் எனக்கும் குறைந்தே போயிருக்கிறதென்பேன்…
சரி, எப்படி துவங்குகிறது இந்நாவல் என்று நான் வாசிக்கத்துவங்கிய நிமிடங்களில்தான் உணர்ந்தேன் இதை வாசித்துமுடிக்காமல் மூடி வைக்க முடியாதென்று !
