Iskandar Barak
நற்பண்புகளென்பது தாய் தந்தையின் வளர்ப்பில் தானாய் வருவது ....தான்
காலம் கடந்த பின் வருவதென்பது கற்பித்தலில் உள்ளது ..இது காற்றில் அடித்து சென்றுவிடுமென்பதால் நம்ப முடியாததும் தங்க முடியாததுமாகும்.
ஆகவே ......
தாய் தந்தையர்களே உங்கள் பிள்ளைகளுக்கு இளவயதிலிருந்தே நற்பண்புகளை கற்றுத்தாருங்கள்
பிள்ளைகளின் முன்னால் பீடி சிகரெட் குடிப்பதும்
பிள்ளைகளின் முன்னால் மேக்கப் லிப்ஸ்டிக் போடுவதும்
நற்பண்புகளில் சேராதென்பதையும் தாய் தந்தையர் கவனத்தில் கொள்ளுதல் இங்கே அவசியமாகும்.
தீயவைகள் உடனே தொற்றிக்கொள்ளும் தொற்று நோய் போன்றது ...........அதே நேரம்
நல்லவைகள் அவர்கள் தோளில் ஏற நாமே முயற்சிக்க வேண்டும் ..........இல்லையெனில்
உங்களால் காட்டப்பட்ட தீயவைகளே உங்களை காலத்தில் கழுத்தறுக்குமென்பதை மறக்க வேண்டாம்.
முகம் பார்க்காது முதுகை பார்த்து மகனே கேட்பான் ..ஏம்ப்பா தீப்பெட்டியிருந்தா கொடு யென்றும்
மகள் கேட்பாள் ..ஏம்மா இந்த கலர் லிப்ஸ்டிக் சரியில்ல வேற போடச்சொல்ரான் என் பாய்பிரண்டு வாங்க காசு தா யென்று
அப்போது ..........
உங்கள் மனம் படும்பாடு நீங்கள் செத்துவிடவே சொல்லும் .........ஆகவே
வெள்ளம் வருமுன் அணைகட்டி வளர்ப்போம்.
No comments:
Post a Comment