Saturday, September 9, 2017

போராட்டம் ....!

நாளைக்காக அடுத்த வேளைக்காக உணவைக் கூட சேர்த்து வைக்கும் பழக்கம் இருப்பது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமே.
பறவைகள் அதிகாலையில் இரைதேடி பறந்து செல்கின்றன தானும் உண்டு கூட்டில் குஞ்சுகள் இருந்தால் அவற்றிற்கும் வேண்டிய உணவை மட்டும் அன்றாடம் தேடிக் கொள்கின்றன.
மேலும் பசித்தால் மட்டுமே உண்கின்றன பிற உயிரினங்கள்.
ஒவ்வொரு உயிருக்கும் உணவளிப்பவன் இறைவன் என்பதை மனிதன் மறந்து விடுகிறான்.

ஏற்ற தாழ்வுகளும் மனிதனிடமே காணப் படுகிறது. படித்து வழக்கறிஞராக தென்னாப்ரிக்காவில் தொழில் செய்து வந்த காந்தி அங்கு வெள்ளையர்கள் மட்டுமே பயணிக்கும் ரயில் பெட்டியில் பயணிக்க வேண்டி அமர்ந்திருந்த போது வெள்ளையன் ஒருவனால் தூக்கி வெளியே வீசப்படுகிறார். அன்று அங்கேயே தொடங்கியது தனிமனித சமத்துவமும் உலக நாடுகளின் சுகந்திரமும் போராட்டங்களும்.
மாபெரும் போராட்டங்களாலும் தியாகங்களினாலும் பெற்ற சுகந்திரமும் தனிமனித சமத்துவமும் திரும்பவும் பறிபோய் விடக்கூடாது.
சுதாகரிப்போம்
அறிந்துகொள்வோம் நியாய அநியாயங்களை.
நிலைநிறுத்துவோம்
சாந்தியும் சமாதானமும் நிலவும் சகோதரத்துவத்தை.
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.
ராஜா வாவுபிள்ளை

No comments: