என்னுள் எல்லாமே
நிறைந்து இருந்தது ஒன்றும் இல்லாமலே
இருந்தது எல்லாமே என்னைத் தேடுகின்றன
ஓய்வும் ஒழிவுமின்றி !
வாழும் வழிகள் அனைத்தும்
எனது இருப்பிடம்
பார்த்து திருப்பி விடப் படுகின்றன
வட்டமிட்டு வானம் தொட்டுவிட !
இமைகள் மூடியபடி
கண்கொள்ளா காட்சிகள் கோர்வையாய்
காலக்கெடுவின்றி தூராதொலைவிற்கு கொண்டு செல்கின்றன!
கண்காணா தூரதேசத்தில் பரிச்சயமான மொழிகளின் சம்பாஷனை தொடர்கிறது
எதுவும் புரிந்தும் புரியாமலும் !
இரவும் பகலும் இல்லாத அண்டப்பெருவெளியில்
உறக்கமும் இல்லை
விழிப்பும் இல்லை
ஏகாந்த நிதர்சனத்தின் நிறைவு
வியாபித்து இருந்தது !
உறக்கத்தில் ஆழ்ந்தால்
உண்மைகள் புறத்தாகிவிடுமோ?
அல்லும் பகலும் அகக்கண்
விழித்தே இருந்தது பங்கம் வந்து
அண்டிவிடாமல் கட்டிக்காத்தபடி !*
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment