பணியில் கிடைக்கும் பலனை
பணத்தில் கூட்டும் தர்மம் - உழைப்பு
திறமையில் மிளிர்ந்து வடிவாய் காட்டும்
உண்மையாய் வியர்வை சிந்தும் - உழைப்பு
படிப்பில் கிடைத்த அறிவை
தொழிலில் காட்டும் வித்தை - உழைப்பு
செய்முறையில் திருந்தச் செய்து
படைப்பில் முழுமை தெரிவது - உழைப்பு
செய்யும் தொழிலை உயிரா ய்
உயர்வாய் போற்றிக் காப்பது - உழைப்பு
உடனுக்குடன் பலனை பார்க்காது
தொடர்ந்து பணியை செய்வது - உழைப்பு
பணி சிறக்க உடல் வருத்தி
வியர்வை சிந்த வருவது - உழைப்பு
செய்யும் தொழிலில் விருப்பும்
சேர்த்திட வெற்றிக்கனி தருமே - உழைப்பு
சோம்பேறி ஆகாது உடலும்
உள்ளமும் சுறுசுறுப்பாய் சிறப்பது - உழைப்பு
சீரும் சிறப்பும் ஒன்றாய்
சேர்த்து புகழும் தருமே - உழைப்பு.
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment