Wednesday, August 23, 2017

வேலை தேடுவோருக்கு .....

இஸ்கந்தர் பராக் Iskandar Barak

கத்தார் ...விசா ப்ரி விசிட்டில் வந்து தங்கி வேலை தேடி விடலாம் எதற்கு நமது நாட்டில் நடக்கும் இண்டர்வியூ போன்றவற்றில் பங்கேற்கவேண்டும் ஏஜென்ஸிக்கி பணம் கட்ட வேண்டும் ..யென நினைக்கும் நண்பர்களுக்கு எனக்குத்தெரிந்த யோசனை இதோ ...
வேலையில்லை தேடினாலும் கிடைக்கவில்லை வீட்டில் சிரமம் தந்தையார் வருமானம் போதவில்லை நானும் படித்து விட்டு சும்மாயிருப்பது மனசுக்கும் வீட்டுக்கும் பாரம் ஏஜென்சிகளை நம்பி போய் பணம் கட்டுவதும் இப்போதைய காலத்தில் முடியாத காரியம் கட்டினாலும் கொண்டுட்டு எஸ்கேபாயிடுராங்க ....இந்த நிலையில்
தற்போது கத்தார் நாடு தன் பாதையை விசாயில்லாது திறந்து விட்டிருப்பதை பயன்படுத்தி சென்று வேலை தேடிவிடலாமென ஈஸியாக நினைப்பு வருவது சகஜம் தான் ...காரணம் மனசும் சூழலும் நமக்கு அப்படித்தான் தோண வைக்கும் நினைக்க வைக்கும் ............அதே நேரம்
அதிலுமுள்ள லாப நஷ்டங்களையும் சிரமங்களையும் கணக்கிலெடுக்க தெரியாதோருக்கு இந்த விளக்கம் துணை புரியலாமென்பதால் சொல்கிறேன் .........அன்பர்களே

நீங்கள் படித்தவர்கள் டிகிரி முடித்தவர்கள் பட்டம் வாங்கியவர்கள் அதனால் லேபர்களைப்போல சிந்திக்காது தைரியமும் நம்பிக்கையும் தேடலும் கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளீர்கள் ....ஆம்
முதலில் அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள் இதோ .....
முதலாவது ...
எந்த ஏஜென்ஸியில் இண்டர்வியூ முறையாக நடக்கிறதோ அந்த ஏஜென்ஸி எடுத்த எடுப்பிலேயே பணம் கட்டுங்களென சொல்லவே சொல்லாது ...அப்படி பணம் கட்டுங்களென சொல்லுமானால் அது 100 சதவீதம் போலி ஏமாற்று ஏஜென்ஸியே யென்பதை மறந்தும் மறக்காதீர்கள்.
இரண்டாவது ..
அவர்கள் தேர்வான உங்களிடம் பாஸ்போர்ட் போட்டாக்கள் மட்டுமே கேட்பார்கள் மெடிக்கல் எடுக்கச்சொல்லலாம் அதே நேரம் உங்களுக்காக சம்பளம் யாவுமே விபரமாய் சொல்லி விடுவார்கள் ஆபர் லெட்டரிலும் கையெழுத்து வாங்கி அதில் காபியை உங்களுக்கு தந்து விசா ரெடியாகி கிளம்பும் போது டிக்கெட் முதலான யாவுமே அந்த கம்பெனி கொடுத்து விடும் இவர்கள் குறிப்பிட்ட சின்ன தொகையையே கடைசியாக கட்டி பாஸ்போர்ட் டிக்கெட் வாங்கச்சொல்வார்கள் ..இதுவே முறையான ஏஜென்ஸியின் வேலையென்பதை மறக்கவேண்டாம்.
இப்படி முறையான ஏஜென்ஸியில் இண்டர்வியூ கிடைத்து அவர்கள் கேட்கும் பணத்தை கட்டி முறையாக வருவோருக்கு ...ஆகும் செலவு
விசாயில்லாது ...
ரெண்டு டிக்கெட் எடுத்து இங்க வந்து ..
தங்கும் செலவு
போக்குவரத்து செலவு
சாப்பாட்டுச்செலவு
ஒரு மாதத்தில் முடியாவிட்டால் மறுமாத செலவு
இப்படியாக சிறுகச்சிறுக ஆகும் செலவை விட மிகக்குறைவே.
உதவ இங்கே உறவினரோ நண்பரோயிருந்தாலுமே அதுவும் பெரிய சுமையும் மனசஞ்சலமுமே.
ஆகவே ......முறையான ஏஜென்ஸி யை நாடி அவர்கள் மூலம் வர முயற்சியுங்கள்.
இதுவே சாலச்சிறந்தது ..இதனால் சற்று தாமதமானாலும் தன்மானமும் தன்னம்பிக்கையும்
மிஞ்சும்.
தெரிந்ததை ..அனுபவித்ததை சொல்கிறேன்.
பொதுவாக நலன் விரும்பி இந்த பதிவு.
இஸ்கந்தர் பராக் Iskandar Barak

No comments: