Saturday, August 19, 2017

ஹாஹாஹாஹா...

Iskandar Barak
ஹாஹாஹாஹா...
நேத்து ராத்திரி நம்ம பசங்க புட்டு செய்ரோம் அண்ணே நீங்க வெயிட் பண்ணுங்கனு சொன்னாய்ங்க வீரப்பனும் தேவந்திரனும்.
சரி ரெம்ப நாளாச்சே சாப்டலாமேனு நினைச்சு வெயிட்டிங் பண்ணேன்
நம்ம டைம் அவங்களுக்கு தெரியுமே ..கரெக்டா கொண்டாந்து கொடுத்தாங்க
புட்டும் அதுக்கு சால்னா வும்.
அப்ப பாத்து வீட்டுக்காரம்மா போன் பண்ணுச்சா ....விபரம் சொன்னேன் வீடியோவுல காட்டுனேன் புட்டையும் கொழம்பையும்
புட்டுக்கு கொழம்பா .....இதுக்கு சோறே சாப்டலாம்ல இதுக்கெதுக்கு மெனக்கெட்டு செய்யனும்னு கேட்டுச்சு
ஏன் ..னு கேட்டேன்

நம்மூர்ல புட்டுக்கு தேங்கா பாலும் ஜீனி யும் தானே தொட்டுக்குவோம் அது மாதிரியில்லயானு கேட்டுச்சா
ஹாஹாஹா ..நீ வேற ஏன் மா
இது இங்க கத்தர்ல கிடைக்கிறதே காதலி கிடைக்கிறது போல இதுல
தேங்கா பாலு மாங்கா பாலு னு சொல்லிக்கிட்டுனு சொன்னனா ...
காதலியா ...........பெரிய இவரு னு போன வச்சுருச்சே மக்கா
நானென்ன தப்பா சொல்லிட்டேன் ஹிஹிஹிஹிஹி

No comments: