Gajini Ayub
யூ டியூபில் இன்றொரு மெல்லிசைக் குரலொன்று புதிதாய்கேட்டேன் ! குரலுக்கு சொந்தக்காரர் நம்மின் முக நூல் சகோ நீடூர் Kiyasudeen Sahabudeen !!
அவர் பாடியிருப்பது மறைந்த மாணிக்க மனிதர் நீடூர் அய்யூப் அண்ணன் அவர்கள் பற்றி !
நிகழ்காலத்தில் நேரில் கண்ட நேசக் குழந்தை குணம் படைத்த அய்யூப் அண்ணன்தம் சொந்த மண்சார்ந்த செய்திகளை முக நூலுக்கு முன் காலத்தே நம்ம ஊரு செய்தி என்று அச்சிலிட்டு பெருமை சேர்த்தவர்
எளிய அறிமுகத்தில் என்னை அடையாளம் கண்டு அன்பில் விஸாரித்தவர்.
இஸ்லாமிய உலக தமிழ்சங்கங்களுக்கு தலைமகன் என்ற பங்கேற்பு !
கல்வித் தேடல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் !
உலகார்ந்த வணிகத்தில் உறங்காமல் உழைத்தவர் !
நட்பிற்க்கு எளிமை ! நலம் விஸாரிப்பதில் முந்தி கொள்பவர் !
காலத்தின் மறைவிலும் முந்தி கொண்டார் !!
மிதி வண்டியில் மிதவை புன்னகையோடு ஓய்வுக்கு உலா உள்ளூரில் செல்லும் காட்சியில் இவரை அன்றாடம் பார்த்து வியந்தவர் ஏராளம்
தர்ம சிந்தனையில் தாராளம்
ஒரு மனிதருக்கு எத்தனை எத்தனை நல் அடையாளங்கள் !
ஒரே பாட்டில் உள்வாங்கி பாடா விட்டாலும் பட்டவரை பாடியிருக்கிறார் சகோ கியாஸ் !
# மர்ஹூம் அய்யூப் அண்ணனின் ஆத்மா சொர்க்க அடிகள் சேர இன்னாளிலும் பிரார்த்திகிறேன்
ஆமீன்
Gajini Ayub
No comments:
Post a Comment