2 வருடங்களுக்கு முன்னெடுத்த முயற்சி முடிவு செய்திடும் தருணத்தில் நழுவியது . சென்ற வாரம் அன்பர் அழைத்தார் புள்ளியை சமர்ப்பியுங்கள் உங்களுக்குத்தான் மாற்றம் இல்லை என்றார் . சமர்ப்பித்தோம் பழம் நழுவி பாலில் விழுந்தது.
நடுவில் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சென்று ஓர் வாழ்த்தினை சொல்லியே சென்றேன்.
முயற்சியை தொடருங்கள் நிச்சயம் நிறைவேறும்.
------------------------------
வாழ்வின் இருகோடுகளை இணைத்திடவே ஒவ்வொரு நாளும் போராட்டங்கள், கோடுகள் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கலாம். அதனை குறைத்திடவோ நிறைத்திடவோ இருக்கும் மனம் இருந்தால் போதுமானது அனைத்தும் வசப்படும்.
-----------------------------------------
தொழுகையை முடித்துவிட்டு கிளம்புகிறேன் வாசனை திரவிய கடையை கடக்க வேண்டும், முன்னர் அந்த கடைக்கு சென்று விற்பனை பணியாளரை 20 நிமிடம் அலைகழித்து பின்னர் வருகிறேன் என்று கிளம்பிவிட்டேன்.
நேற்று அந்த பணியாளர் இல்லை சொல்லிய வார்த்தை மனதில் தேவையும் இருந்தது சென்றேன் வாங்கினேன் கிளம்பும்போது சொன்னேன் நான் முன்னர் சொன்ன வார்த்தைகள் மனதில் தோன்றியது அதற்காகவே இன்று இங்கு வாங்குகிறேன் .
ஓர் விற்பனை பணியாளரின் வலி இன்னொருவருக்கு மட்டுமே தெரியும் இதனையும் சேர்த்து சொல்லிவிட்டே வெளியேறினேன் மனதில் நிறைவுடன்.
==========
இழப்பின்றி வாழ்வில்லை ஒவ்வொரு இழப்பிலும் விரைவாக மீழ்வதே உங்களின் வாழ்வை செழிக்க செய்யும்.
அடுத்த பக்கத்தை விரைவாக திருப்புங்கள்.
Sheik Mohamed Sulaiman
No comments:
Post a Comment