அஸ்ஸலாமு அலைக்கும், திரு.அப்துல்கலாமின் நினைவிடம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டதும் அதில் அவருக்கு சிலை வடிக்கப்பட்டும் அதனருகே பகவத்கீதை வைக்கப்பட்டதும் திட்டமிட்ட ஆதாயமிக்க அரசியல். அந்த அரசியலுக்கு இந்தியாவில் வாழக்கூடிய எந்த முஸ்லீமும் பலியாகிவிடக்கூடாது. எனவே அது குறித்து நாம் அதிகம் விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு மட்டுமல்ல ஒட்டு மொத்த இஸ்லாத்தின் நிலைப்பாடே சிலை வடிப்பதை ஒழிப்பதும் மறுப்பதும் தான். அதுபோலவே இறந்தவரை பற்றி விமர்சனம் செய்வதும் இஸ்லாத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
திரு. அப்துல்கலாம் நிர்வாண சாமியார்கள் முன் கைகட்டி நின்றிருந்தாலும் சிலைகளை வணங்கியிருந்தாலும், குஜராத் கலவரத்தை ஒரு முஸ்லீமாகவோ அல்லது ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவோ அவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருப்பாரானால் அதற்கான கூலியை அவர் இறைவனிடம் பெற்றுக்கொள்ளட்டும். நாம் யாரும் அதை தடுக்க முடியாது. ஆனால்
அவர் இறப்பதற்கு முன் என்னவாக இருந்தார் என்பதும் இஸ்லாமியராக வாழ்ந்தாரா இல்லையா என்பதும் அவருக்கும் வல்ல இறைவனுக்குமே தெரிந்த உண்மை என்பதையும் நாம் எல்லோரும் உணர வேண்டும்.
அவர் சிறந்த அணு விஞ்ஞானியாக வாழ்ந்தார் என்பதை இஸ்லாத்தை மறுப்பவறும் ஏற்றுக்கொண்ட உண்மை. தனக்கு இறைவன் கொடுத்த அறிவின் மூலம் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒரே நாளில் திரும்பிப்பாரக்க வைத்தவர் அவர்.
மேலும் இந்த நாட்டில் வாழக்கூடிய லட்சோப லட்ச மாற்றுத்தறனாளிகள் காலம்காலமாக அதிக எடையுடன் கூடிய இரும்பு கவசத்தை தூக்கி சுமந்துகொண்டிருந்ததை மிக எளிமையாக்கியிவர்.
எனவே வல்ல இறைவன் அவர் சம்பாதித்த தீமைகளை பொறுத்துக்கொள்ளவும் அவர் சம்பாதித்த நன்மைகளை ஏற்றுக்கொள்ளவும் நம்மிடையே மனமிருந்தால் நாமும் துஆ செய்யலாம்.
அதைவிடுத்து மதிப்புமிக்க இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இன்றைய காலகட்டத்தில் இது போல் பொது வெளியில் யாரையும் கொச்சைப்படுத்த வேண்டியதில்லை என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என் கருத்தில் குறைகள் இருப்பின் ஏக இறைவனுக்காக பொறுத்துக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் அறிந்தவனும், எல்லா ஞானமும் மிக்கவன் ஏக இறைவன் மட்டுமே.
------
வாட்சப் வரவு
No comments:
Post a Comment