Saturday, August 19, 2017

அந்த பெண்மணி புர்காவை போட்டு வந்த போது எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்..

முகம் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தது..

அவர் பெயர் ஹான்ஸன்..ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்.

ஆஸ்திரேலியாவில் புர்காவை தடைச் செய்ய வேண்டும் ..என்று நாடளுமன்றத்தில் சொல்லி தன் முகத்தை மூடியிருந்த துணியை உருவி எடுத்தார்..

எல்லோரும் பாராட்டுவார்கள் என எதிர்பார்த்தார்..ஆனால் நடந்ததோ..!?

இந்த செயல் பிடிக்காத அட்டர்னி ஜெனரல் எழுந்தார்..அருமையான விளக்கம் ஒன்றை உடனடியாக கொடுத்தார்..


"கிட்டதட்ட ஐந்து
லட்சம் முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்கள்.
அவர்கள் அனைவருமே சட்டத்தை மதித்து நடக்கும்
நல்ல ஆஸ்திரேலிய குடிமக்கள்.அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்..
நீங்களும் நல்ல குடிமகளாக இருக்க முயலுங்கள்.."என்று ஹான்சனுக்கு அறிவுரைச் சொல்லி...

"இப்படி ஒரு மத உணர்வை கேலி செய்து உங்களுடைய உண்மையான முகத்தை வெளியை காட்டி விட்டீர்களே.."

என்று ஹான்சனின் உண்மை சொரூபத்தையும் வெளிப்படையாக
போட்டு உடைத்து விட்டார்..

அட்டர்னி ஜெனரலின் பேச்சுக்கு
சபையில் கைதட்டல்
அடங்க வெகுநேரம் பிடித்தது..சபாநாயகரின்
ஆர்டர் ஆர்டர் என்ற
சத்தம் கைதட்டல் ஒலிகளில்
கரைந்து விட்டிருந்தது..

#இஸ்லாமிய
எதிர்ப்புகளில் மதங்கள் ஆர்வங்காட்டுவதில்லை..சில மனிதர்கள் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்..
Saif Saif

No comments: