இந்த முகநூல் வழியாக பல விஷயங்களை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்..
ஒவ்வொரு விஷயமாக பார்ப்போம்..
இந்த முகநூல் நமக்கு நல்ல
ஒரு தன்னம்பிக்கையை தரும் ஊக்க மருந்து என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்..
அது எப்படி என்பது இதைபடித்து முடிக்கும் போது உங்களுக்கு புரியும்..
முதலில் ஒரு பதிவு போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்..
அந்த பதிவிற்கு வரும் விருப்பங்கள்,பின்னோட்டங்களை வைத்து பிறரின் மனவோட்டங்களை தெரிந்துக் கொள்ளலாம்..
சிலர் சொல்லப்படும் கருத்துக்கள் பிடித்ததாக இருந்தால்,நல்லவையாக இருந்தால் அன்பாய் வாழ்த்தைச் சொல்வார்கள்..
இவர்கள் பலருடைய வாழ்க்கையில் உற்சாகமூட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.இது போன்றவர்களை வாழ்க்கையிலும் நாம் சந்தித்திருக்கலாம்..
அடுத்து, நல்ல விஷயத்தை நாம் பல நாட்களாக யோசித்து நல்ல முறையில் எழுதியிருப்போம்..
ஆனால் அதற்கு எதிர்மறையாக ஒரு கருத்தை வந்து சொல்வார்கள்..கருத்துச் சொல்வதில் எந்த தப்பும் கிடையாது..
ஆனால் சில நேரங்களில் அவர்கள் யாரென்றே நமக்கு தெரியாது..நமது ஒரு பதிவுக்கு கூட லைக் போட்டிருக்க மாட்டார்கள்..ஆனால் பிரச்சினை செய்வதற்கு உடனே புறப்பட்டு வந்து விடுவார்கள்..
இப்படி பட்டவர்களை நாம் வாழ்க்கையிலும் பார்த்திருக்கலாம்..இவர்கள் தன்னை எப்போதும் தனியாக அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புபவர்கள்..
அடுத்ததாக பதிவில் சொல்லவந்த விஷயத்தை திசை திருப்பி விடுவது..
நாம் சொன்ன கருத்தை விட்டு பதிவு வேறு திசையில் திரும்பி பயணித்துக் கொண்டிருக்கும்..
இவர்கள் நாம் சொல்வதை வகை செய்யாமல் அவர்கள் கருத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார்கள்...
இவர்களையும் வாழ்க்கையில் நாம் சந்தித்திருக்கலாம்..
சிலர் என்னதான் நல்லக் கருத்தாக இருந்தாலும்,
உபயோகமான விஷயமாக இருந்தாலும் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்..
ஆனால் அதே சமயம் ஒரு தேவையில்லாத பதிவில் கமென்டும்,லைக்கும் போட்டிருப்பார்கள்..
இவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் நீ என்ன தான் இங்கு கத்தினாலும் உன்னை ஒரு பொருட்டாகவே நான் பார்க்கவில்லை ..இல்லை உன்னை எனக்கு பிடிக்கவில்லை அப்படி இல்லையென்றால் உன் கருத்துக்கு விருப்பம் தெரிவித்தால் என் கெளரவம் என்னாவது கூடவே கொஞ்சம் பெருமை..இதை
இப்படி இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்..
இது போன்றவர்களையும் வாழ்க்கையில் சந்தித்திருப்போம்..
பார்த்தால் கூட சிரிக்க மாட்டார்கள்..வழியில் கண்டால் கூட ஒரு சலாம் சொல்ல மாட்டார்கள்..முகத்தை திருப்பிக் கொண்டு செல்பவர்கள்..
அடுத்து சிலர் ஒரு இறப்புச் செய்தி,ஒரு வாழ்த்து செய்தி,ஒரு சந்தோஷ செய்தி,ஒரு சோக செய்தி இவை எதற்குமே பதில் சொல்வதில்லை..ஒரு லைக் கூட போடுவதில்லை.அமைதி என்றால் அப்படி ஒரு
மயான அமைதி...
இவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு அடுத்தவன் பிரச்சினை நமக்கெதுக்கு என்றிருப்பவர்கள்..
இவர்களை கையை பிடித்து இழுத்து தான் ஒரு இடங்களுக்கு கூட்டி கொண்டு போக வேண்டும்..
சிலருக்கு சிலர் ஐடி ஓப்பன் செய்து ரிக்கொஸ்ட் அனுப்பி இருப்பார்கள்..
இவர்களுக்கு லைக்,கமென்ட்
போட தெரியாது...
இதுபோன்றவர்கள் வாழ்க்கையில் அடுத்தவன் சொல்றதை தான் கேட்பார்கள்..சொந்தமாக முடிவு எடுக்க மாட்டார்கள்...
சிலர் ஒரு பதிவை போட்டிருப்பார்கள்..அதில் சிலர் கமென்ட் போட்டிருப்பார்கள்..
அப்படி கமென்ட் போட்டவர்களை பிஸியாக இருந்தாலும் மறுநாளாவது வந்து அவர்களுக்கு ஒரு லைக் கொடுத்து அவர்களையும் மகிழ்வூட்டுவார்கள்..
இப்படிப் பட்டவர்கள் தான் வாழ்க்கையில் பிறருடைய கருத்துக்கும் மதிப்பளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்..
சிலர் நாம் போடும் பதிவில் வந்து நகைச்சுவையாக நம்மை கலாய்ப்பார்கள்..
இவர்கள் பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்க்கையிலும் பொதுவாகவே கலகலப்பாகவே இருப்பார்கள்..
இன்னும் சிலர் நாம் ஒரு பதிவை போட்டிருந்தால் கோபத்தில் அதற்கு பதில் பதிவை போட்டு விடுவார்கள்.
இவர்கள் வாழ்க்கையில் பிறர் செய்யும் நல்ல காரியங்களை விட குறைகளையே பெரிதாக பேசுவார்கள்..
சிலர் பிடித்த எல்லா பதிவையும் லைக் செய்வார்கள்..
இப்படிபட்டவர்கள் எல்லோரிடமும் அனுசரித்து போக கூடியவராக இருப்பார்கள்..
சிலர் முக்கியமான பதிவுகளுக்கு மட்டும் லைக்,கமென்ட் போடுவார்கள்..
இவர்கள் பெரும்பாலும் பிரபலங்களாக இருப்பார்கள்..
சிலர் எல்லா பதிவுகளிலும் கமென்டுகளை போடுவார்கள்..
இப்படிப் பட்டவர்கள் எல்லோரோடும் சகஜமாக பழக கூடியவர்களாக இருப்பார்கள்..
சிலர் குறிப்பிட்டவர்களின் கேள்விகளுக்கு
மட்டும் மறுபதில் சொல்வார்கள்.குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் கமென்ட் போடுவார்கள்..
இவர்கள் பெரும்பாலும் ஆள் பார்த்து தான் பேசுவார்கள்..
மேற் சொன்ன அனைத்தும் வாழ்க்கையில் அன்றாடம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது..
இந்த குணாதிசயங்களில் நாம் எந்த குணத்தில் இருக்கிறோம் என்பதை இதை வைத்து ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்..
அப்புறம் ரொம்ப யோசிச்சு ஒரு பதிவை போட்டால் அதுக்கு பத்து லைக் கூட விழாது..
அதே நேரம் யோசிக்காமல் போடுற சப்ப பதிவு லைக்கை அள்ளும்..
இது எப்படி என்றால் ரெம்ப பிளான் செய்து செய்யற காரியங்கள் சில நேரம் நம்மை ஏமாற்றி விடும்..அதே நேரம் ஏனோதானோன்னு செய்யற செயல்கள் நல்லவையாக அமைந்து விடுவதில்லையா அது போல தான்
இது ஒரு உளவியல் சம்பந்தமான பதிவு தான்..மேலும் இது யோசித்து போட்ட பதிவல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பல வித போராட்டங்களையும் சந்தித்து மன உறுதியோடு நாட்களை கடத்துவதற்கு இந்த முகநூலில் வரும் கேரக்டர்களும் ஒரு வகையில் உதவி செய்கிறது..
அது பலரையும் அடையாளப் படுத்துகிறது என்றால் அது சரியானது தான் என்பதாக எனக்குத் தோன்றுகிறது..
நீங்கள் தான் இது உண்மையா என்பதை தெளிவு படுத்த வேண்டும்..!!
Saif Saif
No comments:
Post a Comment