ப்ரி விசா வில் சென்றுள்ள நான் ...வேலை தேடவேண்டுமெனில் முதலில் இகாமா யெனும் ஒர்க் பர்மிட் வேண்டும் ....யென்பதால் அதற்காக வெயிட்டிங் செய்து உறவினர் ரூம்பில் ...
நாட்கள் நகர நகர மிகுந்த சிரமத்தை தரும் நேரம் அது மூன்று நாட்கள் பொறுத்த நான் முடியவில்லை சரி ..இகாமா வரட்டும் பார்க்கலொமென்ற முடிவில் வேலை தேடி வெளியேறினேன் ...தெரிந்த நண்பர்கள் உறவினர்களிடம் சொல்லி வைத்ததில் ஒருவர் போன் செய்தார்
மச்சான் ஒரு வேலயிருக்கு வந்து பேசுரிங்களாயென்று ......உடனே போனேன்
அந்த அரபிக்காரருக்கு என்னையும் என் அரபி பேச்சையும் கண்டதும் பிடித்துவிட்டதால் ...இகாமா வரட்டும் வராம போகட்டும் நான் பாத்துக்கிறேன் நீ உடனே போயி துணிகள எடுத்துடடு வந்து வேலையில சேர் சம்பளம் யாவும் இதுதான்னு சொல்லிட்டார் ....முதலில் அடுத்தவருக்கு இடஞ்சல் இல்லாது அவரின் ரூம்பை காலி செய்யவேண்டியது கட்டாயக்கடமை இரண்டாவது நமக்கும் வேலை மன நிம்மதி சம்பளம் ஒரு பிடிப்பு வேணுமென்ற நோக்கில் ...அவரிடம் கார் தாங்க போயிட்டு உடனே வர்ரேன்னேன் தந்தார் சேர்ந்து விட்டேன்.
இரண்டு மாதம் ஓடிய நிலையில் அவர் ....தன் வேலைய காட்ட ஆரம்பித்தார் .இவன் தான் நம்மகிட்ட வந்துட்டானே இனி இவன நாம ஆட்டி வைக்கலாமென்ற முடிவில் ...ஒருநாள் ஆபீஸ் வந்தவர் கேட்டார்
நீ வேறிடத்துல வேலை தேடுரியாமே ..யென்றார்
கூடவேல செய்யுர சூடான் நாட்டுக்காரன் போட்டுக்கொடுத்தான்னு தெரிஞ்சுக்கிட்ட நான் ....
ஆமா வேலை தேடுரேன் ....அது என் உரிமை யென்றேன்
போனை எடுத்தவர் ...இந்தா போலீசுக்கு போன் பண்ணு உன்னோட இந்த மாச சம்பளத்த தரமுடியாது ..னு வேகமா பேசினார்
நான் சொன்னேன் ...போன வை இதோ ரெண்டு நிமிஷத்துல வர்ரேனு சொல்லிட்டு .....நேரா ரூம்புக்கு போயி துணிகள எடுத்து பேக்குல போட்டு சக்கர பேக்கு தானே இழுத்து செல்லலாமில்லயா அத இழுத்துட்டு வந்து அவர் முன்னால நின்னு ...
நான் வர்ரேன் ...காச நீயே வச்சுக்க இதுக்கெல்லாம் அசர்ரவனோ பயப்படுரவனோ இந்த இஸ்கந்தரில்லை ..மஅஸ்ஸலாமா ...போய் வர்ரேனு சொல்லிட்டு நேரா கீழ இறங்கி .....கொஞ்ச தூரம் வந்து
மச்சானுக்கு போன் பண்ணேன் ....
என்ன மாப்ள ன்னார் ..விபரம் சொன்னேன்
சரி சரி இருங்க ..கால் மணி நேரத்துல காரெடு்த்துட்டு வந்துர்ரேன்னார் ....வந்தார் போயிட்டேன்.
திரும்ப ....அந்த அரபி போன் பண்ணார் வா அதைவிட அதிக சம்பளம் தர்ரேன்னார் ...
போயா போ ....உன்னையும் உங்கப்பனையும் பாத்துருக்கேன் .........எனக்கு ஆயிரம் வேலயிருக்கு னு சொல்லிட்டு
அடுத்த வேலை தேட ஆரம்பித்தேன் ........
மீண்டும் அதே நிலை ......பட் அசரல ரூம்புல உட்காரல தேடினேன் ...ரோட்டுல போற வர்ர ஆளுக கிட்ட கேட்பேன் சுவர்களில் இருக்கும் விளம்பர கண்டு அவர்களுக்கு போன் செய்வேன் நம்மாளுக கடைகளில் போயி கேட்பேன் இப்படி வேர்வை சிந்த சிந்த கால் நடையாய் ஷூ இல்ல செருப்பு தான் கையில தண்ணி பாட்டில் பைல் .....நேரத்துக்கு சாப்ட காசிருக்காது தான் பட் எதையோ பசிக்காக சாப்டு எடுத்த முயற்சியில் வெற்றி பெறனுமே ....
தேடினேன் தேடினேன் ...கடைசியாக கிட்டத்தட்ட 8 நாட்களுக்குப்பிறகு ...ஒரு கம்பெனியில் செகரெட்டரி வேலை கிடைத்தது புல் பேக்கேஜாக 4100 ரியால் சம்பளத்தில் ..........அது
18 ஜூன் 2004 .........மறக்கமுடியா தினம்.
அந்த ரணம்
அந்த நிலை
அந்த சூழல்
அந்த நெருக்கடி
அந்த மனநிலை
நரக வேதனை யை ஞாபகம் செய்யும் நிலை மக்களே.
அனுபவித்தவன் இஸ்கந்தர் .......அதான் இன்றெல்லாம் அத்தனை சுகத்தையும் இறைவன் தந்தும்
யுன்னமும் ரோட்டார கடைகளிலும் கையேந்தி பவனிலும மளையாளிகளின் சிறிய ஹோட்டலிலும் சாப்பிடுவதை தரக்குறைவாய் நினைக்காது சந்தோஷத்தோடு பழசை மறக்காது ....
சென்று கொண்டுள்ளேன்...
தேடுங்கள் ..ரூம் நிழலில் இளைப்பாராதீர்கள்
மொபைல் நெட்டில் சுகம் காணாதீர்கள்
ஏசி கார்களை காணாதீர்கள்
பைல் களை இறுகப்பிடிக்க மறக்காதீர்கள்
நடங்கள் ...முயற்சியுங்கள்
நிச்சயம் வெல்வீர்கள் .....நம்புங்கள் அன்பு நெஞ்சங்களே.
நேரம் சூழலை கருத்தில் கொண்டு முஸ்லீம்களாயிருந்தா பாங்கு சொல்லும் சப்தம் கேட்டும் பள்ளிவாசல்களில் நுழையுங்கள் அங்கேயும் பணி புரிவோரிடம் உங்கள் நிலைகளை சொல்லுங்கள் ஏதாவது யோசனை கிடைக்கலாம் இன்ஷாஅல்லாஹ் .........
தேடலில் கிடைப்பதே வெற்றி.
பின்குறிப்பு ..
அனுபவசாலிகளே ..வழிகாட்டலுக்காக இந்த பதிவு ....என் அனுபவம் உங்கள் அனுபவத்தை பதியுங்கள் பலவருக்கு வழிகாட்டும் அது..
Iskandar Barak
No comments:
Post a Comment