நான் பெற்ற முதல் குழந்தை
தவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை! முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!
- கலைஞர் மு. கருணாநிதி
மேலும்
முரசொலி மாறன்
திராவிட இயக்க முன்னோடி, சிந்தனையாளர், ஒப்பற்ற எழுத்தாளர், ஆசியாவின் மிகச் சிறந்த பொருளாதார மேதை, முரசொலியின் பிதாமகன், கலைஞரின் மனசாட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூளை, இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர், தமிழ் வளர்த்த ‘முரசொலி’ எனும் முதுபெரும் நாளேட்டின் ஆசிரியர், இளம் பிராயம் தொட்டு பொதுப்பணியிலே ஆர்வம் கொண்டு
மேலும்
முரசொலி அறக்கட்டளை
ஒரு பொது உதவி அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்று கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க முரசொலி அறக்கட்டளை நிறுவப்பட்டது. தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி அதில் சிறப்புப் பெற்றோரில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை உரிய முறையில் கௌரவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான பாவேந்தர் பாரதிதாசனார் பாடல்
மேலும்
http://www.murasoli.in/index.php
No comments:
Post a Comment