- இஸ்கந்தர் பராக்
மனிதர்களுக்கு உதவுவோம்..இறைவன் நமக்கு உதவுவான் சற்று முன் இதோ..
கடந்த இரண்டு ஆண்டுகளாய் எனக்கு டிரைவராய் வேலை செய்து வந்த இலங்கை குருநாகலைச்சேர்ந்த சிங்களப்பையனை கத்தார் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கம்பெனி கடந்த மாதம் செய்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் இவர் பெயரையும் சேர்த்து இம்மாதம் கடந்த 7 ம் தேதியோடு வேலையை நிறுத்தச்சொல்லி ஆர்டர் போட்டு விட்டது
நல்ல பையன் சிங்களமாயிருந்தா நமக்பென்ன ..
யாராயிருந்தாலும் மதம் மொழி நாட்டுக்கப்பால்பட்டு மனிதமே முதலில் ...யென்பதால்
இவரை தொடர்ந்து வேலையில் வைக்க அந்த சமயம் முடிந்தவரை முயன்றேன் என் அதிகாரத்திற்குட்டு....முடியல
அந்தப்பையனிடம் சாரி விராஜ் முடியல உன் விதிப்படியே யாவும் நானும் மனிதன் தானே ,.அதனால்
நீ ஊருக்கு போ ஒரு வழிய அடைத்த கடவுள் பல வழிய காட்டுவார் ..ஊரில் போயி பணவுதவி எப்ப தேவப்பட்டாலும் போன் பண்ணு என்னாலான உதவி நீ அடுத்த வேல தேடும் வரை செய்ரேன் என்று சொல்லிவிட்டேன்
அவரும் ஓகே சார் உங்க சொல்படியே கேக்குறேன்னு சொல்லி வேலைய நிப்பாட்டிட்டு கடந்த 14 நாட்களாக விசா கேன்சலேஷன் பைனல் செட்டில்மெண்ட் மற்றும் டிக்கெட்டிற்காக வெயிட்டிங் பண்ணிக்கொண்டிருந்தார்
தினமும் மாலை நான் ஆபீஸ் வரும்போதெல்லாம் என் முகம் பார்ப்பார் ..எனக்கு சற்று சங்கடமாகவேயிருக்கும் மனசிலும் சின்ன தோல்வியின் வடு கூட.
இன்று அதிகாலை 2.59 நல்ல தூக்கத்தில் இவர் கார் ஓட்ட நானருகில் அமர்ந்து ஏதோ ஒரு புதிய ஹைவே ரோட்டில் போவது போல கனவு கண்டேன்
மனசில் மகிழ்ச்சி ..பட் இது கனவென்பதை முழித்தபின் தெரிந்து பிறகு உறங்கிவிட்டேன் மறந்தும் விட்டேன்
காலை 9.30 மணி
என் மேனேஜர் போன் செய்கிறார் ..இஸ்கந்தர் உடனே வா நான் ஒரு அவசர வேலயா டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் வந்தேன் நீயும் இங்க வா..னு
சரினு வேற டிரைவருக்கு போன் பண்ணி வண்டியெடுத்துட்டு வா னு சொல்லி குளிக்க போன போது இந்த சிங்களப்பையன் ஞாபகம் வந்த்து ..கனவு ஞாபகம் வந்த்து
உடனே அவருக்கு போன் பண்ணி..
விராஜ் உடனே நீ ரெடியாகி வீரப்பனோடு என் ரூம் வா என்னோட உன் ஆபீஸ் போகனுமென்றேன்
போகும் போது சொன்னார் ..சார் 27 ம் தேதி ஊருக்குப்போக டிக்கெட் ராத்திரி வந்த்து லேட்டா கைக்கு வந்த்தால விடிய உங்கட்ட காட்டலாம்னு இருந்தேன்னார்
சரி பரவாயில்ல ...இப்ப நான் உன்னை வரச்சொல்லி அழைத்துட்டு போவது ஒரு கடைசி முயற்சி தான் இது என் மனதிருப்திக்கானது இதில் எது நடந்தாலும் நடக்கட்டும் ...யென்று சொல்லிவிட்டு
நேராக டிரான்ஸ்போர்ட் ஆபீஸூக்கு போனோம் ...என் மேனேஜரை சந்தித்தேன் அவர் டிரான்ஸ்போர்ட் மேனேஜர் அறையில் அவரோடு பேசிக்கொண்டிருந்தார் என்னை கண்டதும் அவரும் விசாரித்து பேசிக்கொண்டோம் ..............அப்போது
இந்த டிரைவர் பையனை வரச்சொல்லி என் மேனேஜரிடம் காட்டினேன் ..அவரும் அந்த மேனேஜரிடம் விபரம் சொல்லி இவருக்கு தொடர்ந்து வேலை தரும்படி கேட்டுக்கொண்டார்
மூவரின் பேச்சில் ..............இறுதியாக
என் முயற்சிக்கும் கண்ட கனவுக்கும் கிடைத்த வெற்றியாக ......சற்று முன்
அந்த டிபார்ட்மெண்டிலிருந்து அட்மின் போன் செய்தார் எனக்கு ..
அந்த பையனுக்கு நாளை முதல் மீண்டும் வேலை தொடர்ந்து உடனே வந்து காரை எடுத்துச்செல்லும்படியும் விசா கேன்சல் செய்யக்கொடுத்த கத்தார் ஐடியை திரும்ப வாங்கிக்கொண்டு வேலையில் தொடரும்படியும் போட்ட டிக்கெட் உடனடியாக கேன்சல் செய்யப்பட மெயில் அனுப்பிவிட்டதாகவும்.
வாவ் ...அவரிடம் விபரம் சொன்ன போது காலில் விழ வந்தார்
நோ ...இறைவனுக்கு நன்றி சொல் உன் மனைவியிடம் சொல்லி குறிப்பிட்ட ஏழைகளுக்கு உணவு தர்மம் செய்யச்சொல் விராஜ் அது போதும்
நல்லோருக்கு நல்லதே நடக்கும் ..போய் கார் எடுத்துட்டு வா ..னு அனுப்பியுள்ளேன்.
மனிதனை பார்ப்போம்....மனிதத்தை மதிப்போம்.
Iskandar Barak
No comments:
Post a Comment