Tuesday, August 15, 2017

இவர்கள் பிறந்த இந்த தேசத்தில் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன்!

Samsul Hameed Saleem Mohamed

ஒருவர் இந்த தேசத்தின் தந்தை ஆனால் அணிந்திருப்பது அரையளவு ஆடை! கோலம் கண்டால் ஒரு சாதாரண ஃபக்கீரின் நிலை!
இன்னொருவர் எல்லைக்கே காந்தி அவரின் ஆடையும் சாதாரணத்திலும் மிக சாதாரணமானதாக! வசீகரம் இல்லாமல்!
பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர்ந்த ஆடையை தன் பெயர் பொறித்து வெளிநாட்டில் தயாரிக்கச் சொல்லி அதை உடுத்தி படோடோப டாம்பீகம் காட்டிய தேசபக்தன் எங்கே...!
இந்த நாட்டின் #தந்தை என்றும் #எல்லை என்றும் பெயரெடுத்த இவர்கள் எங்கே...!

இவர்கள் பிறந்த இந்த தேசத்தில் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன்!
படத்தில்: நம் தேசத்தந்தை மகாத்மா மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி; அவருடன் உயர்ந்த மனிதராய் நிற்பது எல்லை காந்தி என்று பெயர் பெற்ற கான் அப்துல் கஃப்பார் கான்!


Samsul Hameed Saleem Mohamed

No comments: