Noor Mohamed
நெத்திலியும் கெளங்கும்!______________________________
முகநூலில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருந்தேன்.status போட்டு ரெண்டு நாளாகிவிட்டது.எதைப் போடலாமென்று மனதுக்குள் யோசனை வேறு.
வீட்டுக்காரி அருகில் வந்து நின்றாள்.
இந்த விலாயிலெ அப்டி என்னத்தயதான் செய்வீங்க.
நடைல நல்ல மீனே வருதில்ல.ஒரே நாற மீனு.
கொஞ்சம் மீங்கடக்குப் போய் நல்லமீனா வாங்கீட்டு வரப்புடாதா.ஃபோண தூக்கி ஒதுக்கி வச்சீட்டு பொய்ட்டு வாங்களேன் .
சரி,வாங்கீட்டு வாறேன் என்றபடி கிளம்பினேன்.
status க்கு மேட்டர் தந்ததுக்கு
மனசுக்குள் அவளுக்கு நன்றி.
ரோட்டுக்கு வந்தபோது அலி பைக்கில் வந்து கொண்டிருந்தான்.
ஏ,அலி எங்கெ?
மீங்கடைக்கு .
நானும் வாறேன்.
பின்னால் ஏறி அமர்நதேன்.
மலக்கறி கடைகளைத் தாண்டி மீன் ஏரியாவில் நுழைந்தேன்.(மீங்கடைக்கு வந்து ரொம்பநாள் ஆகிவிட்டது).
ஓய் மோலாளி ஒருபாடு நாளாச்சே கண்டு.நல்ல நெத்திலியும் கரமடிச் சாளையும் இரிக்கி வாங்கீட்டு போவும்.
மீன்காரி குரல் எழுப்பினாள்.
இப்பதாம்புள்ளே வாறேன்.ஒண்ணு சுத்திபாத்துட்டு வாறேன்.
போய் பாரும்.எங்கபோனாலும் கடைசீல இங்கதான் வருவீரு.வேற உமக்கு புடிச்ச மீனொண்ணும் இண்ணக்கி இல்ல.
சரிவுள்ளேய் எதுக்கும் ஒரு ரவுண்டு பாத்துட்டு வரேன் என்றபடி நகர்ந்தேன்.
அந்தப்பக்கம் சூரை அறுத்து வைத்திருந்தான்.ரெண்டு நாளா சூரதான்.வேற பாக்கணும்.
இன்னொருவன் கணவாவுடன் இருந்தான்.நமக்கு அது கண்டாலே ஆகாது.
ஒருகுரல் கேட்டது.
காக்கா வாருங்கொ.நல்ல கொளுவ.உயிருள்ள புதிய கொளுவ.பாதி வெட்டட்டா?
அவனருகில் போனேன்.
அவ்வளவு வேண்டாம்.கொஞ்சம் போரும்.
நூறு ரூபாக்கு வெட்டட்டா.
சரி
கத்தியை மீன்மீது வைத்தான்.
அப்பா கொஞ்சம் நீக்கிதான் வெட்டேன் ரொம்ப கொறவா இருக்கு.
நீக்கினா என் வெரலு போச்சு என்று சிரித்தபடியே ஒரு மிலிமீட்டற் அதிகமாக வெட்டித் தந்தான்.
வாங்கிவிட்டு திரிம்பும்போது மீண்டும் அவளது குரல்
ஓய் மோலாளி கொஞ்சம் நெத்திலி கொண்டு போவும்!
சரி,ஒரு 20ரூபாக்குபோடு.
வாங்கி வளியே வந்தால்
அத்துலு கெளங்கு விற்றுக் கொண்டிருந்தான்.
மாமா ஒருகிலோ கெளங்கு கொண்டு போங்கோ.நெத்திலி கூட மயக்குக்கு .
நெத்தலிபோட்டு மயக்கின கெளங்கு!நாவில் எச்சில் ஊறியது.
ஒரு கிலோ 20/ரூபாக்கு வாங்கியபடி வீடுவந்து சேர்ந்தேன்.
அவளுக்கு மிகவும் சந்தோஷம்.நல்ல கொளுவ மீனும் கெளங்கும் நெத்திலியும்!
No comments:
Post a Comment