Tuesday, August 22, 2017

இஸ்லாமியத் திருமணம் தொடர்…

ஓ மனிதர்களே!

உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைத் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தத்தமது உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்) மேலும் (உங்கள்) இரத்த பந்தங்களையும் ஆதரியுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

(இது எல்லாத் திருமண (பிரசங்கம்) குத்பாவிலும் ஒதுப்படும் இறைவசனமாகும்)

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையற்ற நற்குணமுள்ள) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)


ரசூல்  அவர்கள் அறிவுறுத்தினார்கள்:

“திருமணம்” எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம், நஸயீ.

எங்களைத் திருமணம் புரியும்படி கட்டளையிட்டதுடன், திருமணம் புரியாதிருப்போரை கடுமையாக ரசூல் கண்டித்தார்கள். அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்கள் : முஸ்னத் அஹமத், இப்னு ஹிப்பான்.

நபி அவர்கள் கூறினார்கள்:

“எவருக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களுக்கும், வெட்க ஸ்தலத்திற்கும் அரணாகும். எவருக்குத் திருமணம் செய்ய வசதிப்படவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்.” அறிவிப்பு : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆதாரங்கள் : புகாரி: , முஸ்லிம்: , அபூதாவூத்: , நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா,இப்னு ஜாருத், பைஹகீ,

குறிப்பு : திருமணத்தில் மஹர் தருதல், வலீமாவிருந்து, தனது மனைவிக்குரிய உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகள், மணமகன் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மணமகளுக்கு இந்த வசதிகளைப் பற்றி பொறுப்பில்லை. எனவே இது மணமகனுக்கு மட்டும் கூறப்படும் நபிமொழியாகும்

நபி அவர்கள் எச்சரித்தார்கள்:

“மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.” அறிவிப்பு : அபூஹுரைரா (ரலி) ஆதாரங்கள் : திர்மிதி, ஹாகிம், முஸ்னத் அஹ்மத்.

மணமக்களின் தகுதிகள்:-

அல்லாஹ் வரையறுக்கின்றான்: (அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய (முஃமினான) ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை (முஃமினான பெண்களை) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணைவைப்பவன் உங்களுக்கு கவர்ச்சியூட்டுபவனாக இருந்தபோதிலும், ஒரு முஃமினான அடிமை அவனை விட மேலானவன். (அல்குர்ஆன் 2:221)

“விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டான், விபச்சாரி விபச்சாரணையோ அல்லத இணைவைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு எவரையும்) திருமணம் செய்ய மாட்டாள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.”  (அல்குர்ஆன் 24:3)

நபி அவர்கள் தெளிவாக்கினார்கள்:

ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! அறிவிப்பு: அபூஹுரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் (ரலி-அன்கும்) ஆதாரங்கள்: புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா.

நபி அவர்கள் நவின்றார்கள்:

“பெண்களை அவர்களின் அழகுக்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம், அவர்களின் செல்வத்திற்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவற செய்துவிடலாம், அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மணம் முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள) அழகிய பெண்ணை விட மேலானவள்” அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) ஆதாரங்கள்: இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத்.

அன்பு செலுத்தும் அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் (பாரம்பரிய) பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் பெருமிதம் அடைவேன் என ரசூல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.

பெண்ணை பார்த்து நிச்சயித்து மணம் முடியுங்கள்:

நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த ரசூல் , நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப் பகன்றார்கள்.” ஆதாரங்கள்: நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

ஒரு நபித்தோழர் ரசூல்  அவர்களிடம் வந்து தான் ஒரு மதீனத்து (அன்சார்) பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி  அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! (பின் விவகாரமாகக் கூடாது) எனக் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

“ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க பேசிக் கொண்டிருக்கையில் மற்றொருவர் அப்பெண்ணை மண முடிக்க (நிச்சயம்) பேசக்கூடாது” என நபி அவர்களை வலியுறுத்தினார்கள். அறிவிப்பு: அபூஹீரைரா, இப்னு அமர், உக்பா இப்னு அம்மார். ஸம்ரா பின் ஜூன்தும் (ரலி அன்ஹ_ம்) ஆதாரங்கள்: ஸஹீஃபா ஹம்மாம், முஅத்தா மாலிக், புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா..

ரசூல் அவர்கள் மணமுடித்த ஒரே கன்னிப் பெண்ணான ஆயிஷா (ரலி) அவர்களை அல்லாஹ் கனவில் இருமுறைக் காட்டி உங்களது மனைவியென பிரகடணப்படுத்தினான். அறிவிப்பு: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி.

குறிப்பு: நபி அவர்கள் தங்கள் வாழ்வில் மணமுடித்த அனைத்து மனைவிகளையும் நேரில் பார்த்து அவர்களது முழு சம்மதத்துடனே மணமுடித்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

நபி  அவர்களின் அருமை மகள் பாத்திமா (ரலி) அவர்களை நேரில் கண்டு பின் நபி  அவர்களிடம் தனக்கு ஃபாத்திமா (ரலி) அவர்களை மணம் முடித்து தரும்படி அலீ (ரலி) அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனை ஏற்று நபி அவர்களும் மணம் முடித்து வைத்தார்கள். ஆதாரம்: இப்னு ஸஃது

ஒரு திருமணம் முழுமை பெற தேவையானவைகள்:

மணமகன், மணமகளின்றி

1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலீ)

2. இருநீதமுள்ள சாட்சிகள்

3. மணமகளின் முழுமையான சம்மதம்

4. மணமகளின் உரிமையான மஹர் தொகை

நபி கூறினார்கள்: எந்த ஒரு பெண் தன் பொறுப்பாளர் (வலீ) அனுமதியின்றி திருமண சம்மதம் தெறிவிக்கிறாளோ அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது. அப்பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கிறது. எவளொருவருக்கு வலீயில்லையோ அவளுக்கு அரசர் வலீயாவார். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.

நபி கூறினார்கள்: ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது. அறிவிப்பு: அபூஹ_ரைரா (ரலி) ஆதாரங்கள்: இப்னுமாஜா, தாரகுத்னி, பைஹகி

மணப்பெண்ணின் முழு சம்மதம் தேவை:-

ரசூல் அவர்கள் தெளிவாக்கினார்கள்:

அயிம்மா” (விதவை, விவாக முறிவுப் பெற்ற) பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள், பாகிரா (கன்னிப்) பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என சிலர் வினவினார்கள்.

அதற்கு ரசூல் ;: “அவளது மௌனமே சம்மதமாகும்” என்றார்கள். அறிவிப்பு: ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹ_ரைரா (ரலி அன்ஹ_ம்) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

அல்லாஹ் அறிவுறுத்துகிறான்:

“இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.” (அல்குர்ஆன் 4:19)

நபித்தோழி கன்சா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எனது தந்தை கிதாம் (ரலி) அவர்கள் எனது (முழு சம்மதமின்றி) எனக்குப் பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். நான் நபி  அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அத்திருமணத்தை நபி அவர்கள் ரத்து செய்தார்கள். ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, மபகாரி, அபூதாவூத், நஸயீ, தாரமி,

இதற்குப் பின் கன்சா (ரலி) அவர்கள் தனது முழு சம்மத்ததுடன் நபித்தோழர் அபூலுபாமா (ரலி) அவர்களை மணமுடித்ததாக அப்துல் ரஹ்மான் பின் யஜீத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹர் கொடுத்து மணம் முடியுங்கள்:-

அல்லாஹ் ஆணையிடுகின்றான்:

நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)

மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4:24,25)

மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20)

நபி அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி). ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி..

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் அவர்கள் “உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்” என்றார்கள். அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி

போர் கைதியாக பிடிக்கப்பட்ட ஸஃபிய்யா என்ற யூதப் பெண்ணை நபி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை போர் கைதியிலிருந்து விடுவித்தலே அவருக்கான மஹராக இருந்தது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி..

மஹர்-திருமணக்கொடை-மணப்பெண்ணின் தனி உரிமை. அதில் தலையிடவோ, அதற்கு வரையறையிடவோ எவருக்கும் உரிமையில்லை. ஒரு மணப்பெண் ஒரு பொற்குவியலைக் கூட தனக்கு மஹராக கேட்க உரிமையுண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 4:20)

திருமணத்தின் குறிக்கோள்:-

திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாக பகிர்ந்து கொள்வது இஸ்லாமிய திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி அவர்கள் உணர்த்தினார்கள். அறிவிப்பு: உக்பா பின் ஆமிர் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ

குறிப்பு: பசிக்கு உணவு, தாகத்திற்கு நீர், உடல் தேவையான மற்றொரு துணை தேவை என்பது இயற்கையின் நீதியாகும். எனவே பசி, தாகம், மோகத்தை அடக்குவது இயற்கையின் நியதிக்கு விரோதமானதாகும். மேகத்தை அடக்கி மோட்சமடையலாமென வாதிடுவோர், அவர்களது பெற்றோர் அப்படிப்பட்ட மோட்சத்தை நாடியிருந்தால் இவர் பிறந்திருப்பாரா? என்பதை சிந்திக்கவும். இஸ்லாம், மோகத்தை நியாயமான (திருமண) வழியில் தீர்த்து அத்துடனே மோட்சத்தை அடைய முடியும் என்பதை கூறும் ஒரே மார்க்கமாகும். நியாயமான வழியில் தீர்க்காமல் மிருகங்களைப் போல தாறுமாறாக வாழ்வதால் இன்று எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் உருவாகியுள்ளதை அறியலாம். இன்று எல்லோரும் உங்கள் துணைவர் துணைவியர்களிடம் உண்மையாளர்களாக இருங்கள் எனக் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருமணத்தின் குறிக்கோளாக இஸ்லாம் இதனை வகுத்துள்ளது.

தடுக்கப்பட்ட திருமண பந்தங்கள்:-

“ஷிஹார்” திருமணம்: ஒருவர் தனது மகளையோ அல்லது சகோதரியையோ மற்றொருவருக்கு மணம் பேசி அவரது மகளையோ அல்லது சகோதரியையோ தனக்கு மணம் பேசி எவ்வித திருமணக்கொடை (மஹ்ரை)யும் குறிப்பிடாமல் திருமணம் செய்வதாகும். (விளக்கம்: அபூதாவூத் எண் 2069)

நிக்காஹ் குத்பா:-

இன்னல் ஹம்த லில்லாஹி நஸ்தயீனுஹ_ வநஸ்தஃ பிருஹ_ வனவூது பில்லாஹி மின்ஷ_ருரி, அன்புஸினா, வமின் ஐஷஆதி அஃமாலி னமன்யஹ்தில்லாஹ_ ஃபலாமுழில்லஹ_ வமனயுழ்லில் ஃபலா ஹாதியலஹ_ வ அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்;;லாஹ_ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹ_ வரஸ_லுஹ் யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்க துகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன், யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹல்லதீ தஸா அலூன பிஹி வர்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா: யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயஃபிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹ_ ஃபகத் ஃபாஜ ஃபவ்ஜன் அளீமா என்று நபி கற்றுத் தந்ததாக இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதி, அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

குத்பாவின் பொருள் : நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

ஈமான் கொண்ட விசுவாசிகளே இறைவனை முழுமையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிமாகயன்றி மரணிக்க வேண்டாம். (அல்குர்ஆன் 3:102)

ஈமான் கொண்ட விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமகுரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்: மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக் அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

ஈமான் கொண்ட விசுவாசிகளே சொல்வதை தெளிவாகவும் தீர்கமாகவும் சொல்லுங்கள். அல்லாஹ் உங்கள் வணக்கங்களை சீர்;செய்வான், உங்களது பாவங்களை மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்ம் கட்டுபட்டு நடக்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள். (அல்குர்ஆன் 33: 70,71)

இல்வாழ்க்கை இன்பகரமானது:-

அல்லாஹ் அறிவிக்கின்றான்:

நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும்: உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளனதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 2:187)

உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களை அனுபவியுங்கள். (அல்குர்ஆன் 2:223)

பெண்கள் ஆண்மக்கள் பொன்னிலும், வெள்ளியிலுமான பொற்குவியல்கள்: அடையாளமிடப்பட்ட (உயர்ந்த குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள். ஆகியவற்றின் மீதுள்ள இச்சைகள் மனிதர்களுக்கு அழகாகப்பட்டுள்ளது. இவையெல்லாம் இவ்வுலக வாழ்வின் சுகப் பொருட்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடமிருக்கிறது.

(அல்குர்ஆன் 3:14)

நபி தெளிவாக்கினார்கள்: இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல (ஒழுக்கமான) மனைவியை அடைவதாகும். அறிவிப்பு: இப்னு உமர் (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

நற்குணமுள்ளவர்கள் இறை நம்பிக்கையில் (ஈமானில்) முழுமையானவர்கள். தனது மனைவியிடம் நல்ல முறையில் நடப்பவர்கள் உண்மையில் நற்குணமுள்ளவர்கள். அறிவிப்பு: அபூஹ_ரைரா (ரலி) ஆதாரங்கள்: திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

சத்யமார்க்கம்.காம்
readislam.

No comments: