Monday, August 21, 2017

"பசுமை நிறைந்த நினைவுகளே....பாடிப் பறந்த பறவைகளே "

எங்கள் காலத்தில் கல்லூாி பிாிவு உபசார தினத்தில் (College Farewell Day) அன்று இறுதியாக ரத்தத்திலகம் என்ற படத்தின் "பசுமை நிறைந்த நினைவுகளே....பாடிப் பறந்த பறவைகளே "...என்ற பாடல்களே பெரும்பால கல்லூாில் வேதனை கீதமாக முழங்கும். Pin drop silent என்பாா்களே அதுவும், பின் விசும்பலில் ஆரம்பித்து கதறலில் வெடிக்கும் வேதனை...அங்கிருக்கும் அனைவருக்கும் தொற்றிக் கொள்வதை காணலாம்.
சற்று நேரத்திற்கு முன், எனது புத்தக அலமாாியில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படித்த போது, இதே அா்த்தத்தில் உள்ள, " நச் "என்ற நாலு வாிக் கவிதையை படித்த போது...நெஞ்சை நெருடிய பிாிவின் வலி தோன்றிய தென்றால் , அது மிகை இல்லை.
அந்த மாணவி இதை எழுதி முடிப்பதற்குள், எத்தனை வேதனை அடைந்திருப்பாள்..!

******* ***** ****
"துள்ளிக் குதித்து விளையாடிக்
கொண்டிருந்தோம்...!
ஊா் உலகையெல்லாம்
கதி கலங்க வைத்திருக்கிறோம்....!
இன்று
கையசைப்பதிற்குக் கூட
கஷ்டப் படுகிறோம்...
பிாிகையில்..."


Ashraf Ali Nidur

No comments: