இங்கே இருக்கிற பார்க்குகளில் புதுசா ஒரு விஷயம் கொண்டு வந்திருக்காங்க. ஒரு ஜிம்மில் இருக்கக்கூடிய விதவிதமான உடற்பயிற்சி சாதனங்களை வச்சிருக்காங்க. நான் வசிக்கிற பகுதியைச் சுத்தி நாலு பார்க்குகளிலும் இருக்கு. திறந்தவெளியில்தான். யார் வேணாலும் போய் எக்சர்சைஸ் செய்யலாம். (காலை-மாலை நேரத்துல ஹரியாணா ஜாட்டுக - ஆண்களோ பெண்களோ யாரா இருந்தாலும் - நமக்குக் கிடைக்காது.) சரி. அது இருக்கட்டும்.
கிளையன்ட் ஆபீஸ்க்கு போயிட்டு வரும்போது, எப்படித்தான் இருக்குன்னு பாக்கலாம்னு ஒரு பார்க்குல புகுந்தேன். அங்கே ரெண்டு பசங்க இருந்தாங்க. என்னை ஒரு போட்டோ எடுக்கச் சொன்னேன். எடுத்துக் குடுத்தப்புறம், அங்கிள், எங்களை போட்டோ எடுங்கன்னு கேட்டான் ஒரு பையன். உங்கிட்டே செல்போன் இருக்கான்னு கேட்டேன். ரெண்டு பேர்கிட்டேயும் இல்லை. பிரண்ட் கிட்டே இருக்குன்னான். போட்டோ எடுத்து எப்படி அனுப்பறதுன்னு கேட்டேன். பேஸ்புக்ல அனுப்புங்கன்னான்.
சொந்தமா போன் இல்லை. பொருளாதார நிலை எப்படியிருக்குன்னு அவங்க கால்ல இருக்கிற ஸ்லிப்பர் பாத்தாலே புரியும். ஆனா பேஸ்புக் அகவுன்ட் இருக்கு. அதைவிட விசேஷம் - போட்டோவுக்கு போஸ் குடுக்கச் சொன்னதும் அவங்க குடுத்த போஸ்...!
Shahjahan R
No comments:
Post a Comment