என் தாய்க்கு தலைமகன் / Abu Haashima
டாக்டர் ஹபிபுல்லாஹ் B.sc, M.B.B.S, Dch
அவர்களுக்கு
டாக்டர்கள் தின வாழ்த்துக்கள் !
குழந்தைகள் நலத்தில் ஆர்வம் கொண்டு
#HabibChildrensHospital
தக்கலையில் ஆரம்பித்தவர்.
பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்த போது அசோக் நகரில் ஹாஸ்பிடல் வைத்து
மருத்துவ பணி செய்தார்.
பிறகு சவுதி மக்காவிலும் பல வருடங்கள்
பணிபுரிந்தார்.
இப்போது குமரி மாவட்டம்
வெள்ளமடத்தில் உள்ள
ஜெர்மனி நாட்டவர்கள் நடத்தும்
#அகஸ்தியமுனிகுழந்தைகள்மருத்துவனை யில் பணியாற்றுகிறார்.
இரு தினங்களுக்கு முன்னால்
#திட்டுவிளையிலும் அதன் பிளை திறக்கப்பட்டு
#டாக்டர்_ஹபிபுல்லாஹ் அங்கேயும்
சிகிட்சையளிக்கிறார்.
டாக்டர் ஹபிபுல்லாஹ் பி.யு.சி.
நெல்லை சேவியரிலும்
B.sc திருவனந்தபுரம்
மார்வானியஸ் காலேஜிலும் படித்தார்.
டாக்டர் படிப்பை மதுரை மருத்துவக் கல்லூரியில் முடித்து அங்கேயே D.chம் முடித்தார்.
படிக்கும்போதே கலை இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர். மருத்துவக்கல்லூரியில்
முத்தமிழ் மன்ற செயலாளராக இருந்தார்.
அப்போதே எம்.ஜி.ஆர்.,ஜெயல்லிதா, சிவாஜி உட்பட பல கலைஞர்களை அழைத்து விழாக்களை நடத்தியிருக்கிறார்.
பின்னர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரானார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு
" முதலமைச்சர் சத்துணவு உயர்மட்டக்குழு "
உறுப்பினராகவும்
வக்ப் வாரிய கணக்குக் குழு உறுப்பினராகவும்
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினராகவும்
மற்றும் பல பொறுப்புகளிலும் இவரை நியமித்தார்.
தான் மேற் கொண்ட அத்தனை பொறுப்புகளிலும் சாதனைகள் நிகழ்த்தி
" பொறுப்பானவர் " என பெயரெடுத்தவர்
டாக்டர் ஹபிபுல்லாஹ் .
இத்தனைக்கும் இவர் அதிமுகவின் உறுப்பினர் கூட கிடையாது.
பல நாடுகளுக்கும் சென்று வந்திருக்கும் டாக்டர் குழந்தைகளுக்கான மருத்து சேவையை புனிதமான பணியாக நினைத்து மன நிறைவோடு செய்து வருகிறார்.
மிகச்சிறந்த எழுத்தாளர் ஹபிபுல்லாஹ்.
மறைந்த தினகரன் கந்தசாமி அவர்களோடு நெருக்கமான நட்புடையவர்.
தினகரனில் இவர் எழுதிய உலகத் தலைவர்கள் பற்றிய வரலாற்றுத் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றது.
சவுதி கல்ப் டைம்ஸ் இவரது ஆங்கலக் கவிதை ஒன்றை வெளியிடப்பட்டு
ஒரு முழுப்பக்கத்திற்கு இவரைப் பாராட்டியது.
நிறைய மருத்துவ உரைகள் வழங்கி இருக்கிறார்.
பல குழந்தைகளை பலவிதமான
மனநோய்களிலிருந்தும் மீட்டெடுத்திருக்கிறார்.
சிறந்த ஆன்மீக ஞானம் உள்ளவர்.
சில டாக்டர்களின் முகத்தைப் பார்த்தாலே
பாதி நோய் குணமாகி விடும்.
டாக்டர் ஹபிபுல்லாஹ்வின் முகத்தைப் பார்த்தால் முக்கால்வாசி நோயும் குணமாகிவிடும்.
டாக்டரின் பணிகள் தொடர வேண்டும்.
அவரது சேவைகள் பல்லாண்டு பல்லாண்டு
தொடர வேண்டும் என இறையை வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment