ஒழுக்கத்தின் முதல்படி சுத்தம். இது நாட்டுக்கும் வீட்டுக்கும் எனக்கும் உனக்கும் பொருந்தும்.
ரூவாண்டாவில் இனப்படுகொலை நடந்தது 1994 ம் வருடம். பல வருடங்களாகவே ரூவாண்டாவிற்கு வந்துபோய் இருந்தாலும், அந்த துயரகரமான சம்பவத்துக்கு பிறகு 1998 ல் மீண்டும் எனது பயணம் தொடர ஆரம்பித்தது.
இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது எனது எண்ண ஓட்டம் பின்னோக்கி செல்கிறது. அப்போது இடுகாட்டு
அமைதி நிலவிய ருவாண்டா நாடு இன்று வேகமாக வளரும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக அமைதி பூங்காவாக திகழ்கிறது.
உலகிலுள்ள சுத்தமான நகரங்களில் ரூவாண்டாவின் தலைநகரம் கிகாலி மூன்றாவது
இடத்தை இந்தவருடம் பெற்றுள்ளது என்பது பெரும் மகிழ்வைத்தருகிறது.
இரண்டு வருடத்தில் ஒரு முறையோ இருமுறையோ இங்கு வரும்போதெல்லாம் மாற்றங்கள் முன்னேற்றங்கள் கண்கூடாக காணமுடிகிறது.
எப்படி இப்படியெல்லாம்?
ஒழுக்கமும் சுத்தமும் மக்களுக்கு போதிக்கும் அரசும் அதையே பின்பற்றுவதுதான். இது ஒன்றும் பெரிய வித்தை இல்லை. அரசன் எவ்வழி அவ்வழியே மக்கள். அவ்வளவுதான்.
மாதத்தின் எல்லா கடைசி சனிக்கிழமை தோறும் காலையிலிருந்து 11 .30 மணிவரை அதன் மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வசிப்பிடத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் மனதார ஒவ்வொருவருடைய உழைப்பாலும் சுத்தம் செய்கின்றனர் .
அதுவே அவர்களுக்கு நல்ல சோறும் போடுகிறது.
உணவுக்கு உகாண்டாவை நம்பியிருந்த காலம் மாறி இப்போது ரூவாண்டாவில் இருந்து பீன்ஸ் போன்ற உணவு வகைகள் உகாடாவுக்கு இறக்குமதி ஆகின்றது.
முக்கியமாக, அடுத்த வாரம் இங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது ஆனால் நாம் எதிர்பார்க்கும் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் அட்டூழியங்களும் இல்லவே இல்லை அமைதியும் ஆனந்தமே நிலவுகிறது .
உகாண்டாவிலோ இந்தியாவிலோ இந்த நிலையை கனவிலும்கூட நினைத்துப் பார்க்க முடியாது.
நல்ல மாட்டுக்கு மட்டுமல்ல நல்ல மக்களுக்கும் ஒரு சூடு போதும்தானே!
தலைவனுக்கா ...?
மக்களாகியா நாம்தான் போடவேண்டும் சூடு.
எண்ண ஓட்டம் ....!
ராஜா வாவுபிள்ளை
தொடரலாம்.
No comments:
Post a Comment