அதில் சில சிறப்புகளை பார்ப்போம்...
மேலும் திண்ணமாக நற்குணத்தின் உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்(68:4)
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக.இது நீர் செய்ய வேண்டிய அதிகப் படியான தொழுகையாகும்.. (இதன் பாக்கியத்தினால்), உம்முடைய இறைவன், ´மகாமம் மஹ்முதா´ என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பலாம்(17:79)
இது நபி(ஸல்) அவர்களுக்கு கடமையாக்கப் பட்ட கூடுதல் தொழுகை..
கைபரை வெற்றி கொண்ட பிறகு மிஷ்கம் என்பவன் மனைவி ஜைனப் என்பவள் நபிக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஆட்டு கறியில் விஷத்தை வைத்து விட்டாள்..
நபி அவர்கள் அதை எடுத்து கடித்ததும் அதில் விஷம் இருப்பதை அறிந்து கொண்டார்கள்..(ஸஹீஹுல் புகாரி,இப்னு ஹிஷாம்)
இப்படி சில ஞானங்களையும் இறைவன் நபிக்கு வழங்கியிருந்தான்.
அதுமட்டுமல்ல ஹுசைன்(ரலி) அவர்கள் பிறந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கு வந்தார்கள்
யாரசூலல்லாஹ்! அல்லாஹ் தங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறான். அத்துடன் துக்கம் விசாரிக்கும் படியும் சொல்லி அனுப்பினான் என்றார்கள். இதைக் கேட்ட நபி அவர்கள் இரகசியங்களை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ஜிப்ரீலே! அல்லாஹ்வின் வாழ்த்துக்கு அர்த்தம் எனக்குப் புரிகிறது. அவனது துக்க விசாரிப்புக்கு எனக்கு அர்த்தம் புரிய வில்லையே என்று கேட்டார்கள்
ஹுசைன்(ரலி) அவர்களை தன் சமுதாய மக்களே குத்திக் கொலை செய்வார்கள் என்பதை ஜிப்ரீல்(அலை) சொல்கிறார் என்பதை அறிந்த போது நபி(ஸல்) அடைந்த வேதனை சொல்லி மாளாது..
நூஹின் சமூகத்தினர்,ஆத்,ஸமூத் இனத்தார்கள்,இப்றாஹீமின் சமூகத்தினர்,லூத்தின் சமூகத்தினர்,மத்யன் வாசிகள் ஆகிய எத்தனையோ சமுதாயத்தை அவர்கள் செய்த அக்கிரமங்களுக்காக இறைவன் அழித்திருப்பதாக குர்ஆனில் கூறுகிறான்..
பார்க்க..(22:42)
அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன(22:45)
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்க முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் ஆக்கி விட்டோம்(23:44)
ஆனால் நம் நபிக்காக தான் நாம் வாழும் இச் சமூகத்தை அழிக்கவில்லை என்றும்,இவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்களாக இருக்கிறார்கள் எனவும் இறைவன் கூறுகிறான்..
"ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை".(8:33)
இதிலிருந்து நபியின் சிறப்பை இறைவன் மேன்மையாக வைத்துள்ளதை உணர்ந்து கொள்ளலாம்..
நபி(ஸல்) வெண்மை நிறமுடையவர்..அழகிய முகமுடையவர்.நடுத்தர உடம்பும்,உயரமும் கொண்டவர்..
அபூ துஃபைல் (ரலி) அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் 63 வயதில் மரணமடைந்தார்கள்..அவர் உயிர் பிரியும் போது தாடியிலும்,தலையிலும் சேர்த்து இருபது வெள்ளை முடிகள் கூட இல்லை..என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்..
(ஸஹீஹுல் புகாரி,முஸ்லிம்)
நபியவர்கள் 63 வயது வரை எப்படி இளமையாக இருந்தார்கள்.என்பதையும்
இளம் வயதில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ளலாம்..
மேலும் இறைவசனங்களை தன் இஷ்டத்திற்கு நபிகள் சொல்லவில்லை என்பதையும்,
இறைவனின் வஹி மூலம் ஜிப்ரீல்(அலை) சொல்வதை தான் நபி(ஸல்) சொல்கிறார்கள் என்பதையும் பின்வரும் வசனம் மூலமாக இறைவன் தெளிவாகவே விளக்கி இருக்கிறான்..
(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை(7:188)
மேலும்,இவர்(இந்த நபி) சுயமாக இட்டுக் கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால்
நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம் .
பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம்..
பிறகு உங்களில் எவரும் இப்படிச் செய்வதிலிருந்து (நம்மை) தடுப்பவராய் இருக்க முடியாது..(7:43,44,45,46,47)
ஆக நபி சொன்னது..குர்ஆனில் உள்ளது இறைவன் சொன்னது தான் இதில் எந்த
மாற்றுக் கருத்தும்
யாருக்கும் இருப்பதற்கு. ஒரு போதும் வாய்ப்பில்லை.. என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்..
இறை நாடினால்
இறுதி பகுதியில் சந்திக்கலாம்..
No comments:
Post a Comment