Tuesday, July 25, 2017

குடுக்க குடுக்க தீர்ந்துப் போகாத பல விஷயங்கள் நம்மிடம் உண்டு.....!







இறைவா........... சிலருக்கு பிழை 
இன்றி நீ எழுதிய தலை விதியை....
பிழையாக நான் நினைத்து, 
அதை பிழைத் திருத்தும் முயற்சியில் 
நான் பெரும் பிழை செய்து விட்டேன்.
என் பிழைப் பொறுத்துக் கொள்ளவாயாக...!
எங்கள் சிற்றறிவை சீர்படுத்துவாயாக..!

-------------

அறிவு போதாமல் அன்றாடம் தவிக்கின்றேன்!! 

கனவிலும் கற்றுத் தா 
ரஹ்மானே..!
------------------------
காழ்ப்பும், முழு முயற்சியுடன்
கூடி குடிக் கெடுப்பும்,
சூழ்ச்சியும், சுயம் வாழ பலரை சுரண்டி பிழைத்தலும்,
எல்லாம் செய்யும் எம்மவர்
இனத்தோடு. , 
இணைந்தே வாழும்..... 
அறிவும் ஆற்றலையும்,
வரம் தந்த வல்லோனே... உன்னை 
தொழுது  போற்றுகின்றேன்..!
------------------
குடுக்க குடுக்க தீர்ந்துப் போகாத பல விஷயங்கள் நம்மிடம் உண்டு.....! 
அன்பு, நட்பு, காதல், , பாசம். இவர்களே செல்வந்தர்கள்!!
==========
பயனற்ற பதராக நான் செழித்து வளர்ந்திருந்தால் ..நான் உட்கொள்ளும் உணவும் அருந்தும் தண்ணீரும், அனைத்துமே வீண் ..!
-------------------
எனக்கேன் இந்த பேராசை... எல்லோரையும் நேசிப்பதற்கு.! நேரம் தான் கானுமா... நெருங்கத்தான் முடியுமா.! இருந்தாலும் முயற்சி செய்வோம்.!

-----------------------------
நமக்கான ஃபுரோக்கராமை இறைவன் எப்பவோ ஸெட் பன்னிவிட்டான் நாம் கவணமாக சர்ச் பன்னி கிலிக் பன்னினால் போதும்..!
----------------------------------
முதல் படியில் மட்டும் பார்த்து கவனமாக அடி எடுத்து வைய்யுங்கள்... 
அடுத்த படி எல்லாம் அதே மாதிரி தான் இருக்கும்... பயம் வேண்டாம்.!
==========================
இறைவா.. என் தூக்கம் தொடர்ந்திருந்தால் உன் தொடர்பு துண்டித்திருக்கும். துயிலெழும்ப துணை புரிந்த தூயவனே உனக்கே புகழனைத்தும்.
-----------------------------------


அழகுபடித்திக் கொள்ளாத அழகையும்.. 
அதிகப்படுத்தி சொல்லாத அறிவையும் அதிகாலையில் சந்தித்தேன்.!

விண்ணில் மின்னிய நட்சத்திரம் இன்று எங்கள் வீடு தேடி வந்தது. 
முக நூல் அறிமுகமும், ஊரின் உறவு முறையும் ஒன்றாய் சங்கமித்த சந்தோஷத்தில் நான்... மரியாதைக்கே மரியாதை தர இயலாத தருணம்..!

Haja Maideen
----------------------------------------------------------

முக நூல் அறிமுகமும், ஊரின் உறவு முறையும் ஒன்றாய் சங்கமித்த சந்தோஷத்தில் நான்... மரியாதைக்கே மரியாதை தர இயலாத தருணம்..!   முக நூலில் நான் மூழ்கி எடுத்த சில முத்துக்களில் இவர்கள் முக்கியமான முத்துக்கள்.! நான் பாதுகாக்க வேண்டிய சொத்துக்கள். — Gajini AyubAshraf Ali Nidurராஜா வாவுபிள்ளை and Mohamed Ali.

Haja Maideen

No comments: