எழுபதுகளின் துவக்கத்தில்
B Com M Com படிப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது!யாரைப் பார்த்தாலும் காமெர்ஸ் படிப்பில் சேருவதையே அதிகம் விரும்பினர்!வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட நிலையில் வங்கித்துறையில் பெரும் அளவிலான வேலைவாய ப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பினால் எழுந்த ஆர்வமே அதற்குக்காரணம்!அது ஓரளவு உண்மையும்கூட!எனக்கு அப்போதைய சூழ்நிலையில் அருகிலுள்ள மார்தாண்டம் கிரித்தவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவே வாய்ப்பிருந்தது!
அங்கு காமெர்ஸ் படிப பு கிடையாது!B Sc Physics லல் சேர்ந்தேன்!
85/90 வரை இந்த நிலை நீடித்தது.பிறகு I T துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி காரணமாக B.E.க்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டு புற்றீசல்போல பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு,இப்போது அதன் மவுசு குறைந்து பல கல்லூரிகள் கொள்வாரின்றி மூடப்படும் விசயமும் நாமறிந்த ஒன்றே!
தற்போது G S T அமுலுக்கு வந்துள்ளது!அது விசயமான முழுமையான விவரங்கள் இன்னும் அனைவருக்கும் பிடிபடவில்லை!அலுவலர்கள்கூட கேள்விகளுக்கு சரியான விளக்கம்தர திணறுகிறார்கள்!ஆடிட்டரிடம் சென்று விவரங்கள் கேட்டால் அதிலும் தெளிவானமுறையில் விளங்க சிரமமாகவே உள்ளது!இனி அனுபவங்கள் மூலமே ஓரளவு விஷயங்களை உள்வாங்க முடியும்போல.
இனிவரும் நாட்களில் ஆடிட்டர்கள் அக்கவுண்டன்ட்கள் காட்டில் மழைதான்! வரி கட்டுவது கணக்கு வைப்பது உரியகாலங களில் ரிட்டர்ன் போடுவது கணக்குகளை துல்லியமாக பராமரிப்பது என்று ஏகப்பட்ட நடைமுறைகள் உள ளன!!!
கடுமையான வேலைப பளு இதிலேயே ஏற்படும்!இங்கேதான் ஆடிட்டர் அக்கவுண்டன்ட் களின் பங்களிப்பு பெரிய அளவில் தேவைப்படும்!மீண்டும் காமேர்ஸ் படிப்புத்துறையில் கவனம் திருப்பப்படலாம்!
No comments:
Post a Comment