------------------------------------------------------------
Saif Saif
நபி(ஸல்) அவர்களுக்கு குரைஷிகளால் பல ஆபத்துகள் இருந்தது..சாதாரணமாக ஐந்து வேளை பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுபவராகத் தான் இருந்தார்கள்..எதிரிகள் எப்போதும் கூடவே இருந்தார்கள்..ஆட்சியதிகாரம் கைகளில் இருந்த பிறகும் எளிதில் பிறர் சந்திக்கும் நபராகத் தான் இருந்தார்கள்..இதையறிந்த இறைவனும்,அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.(5:67)
என்று உறுதியையும்
வழங்கி நபியை எல்லா சந்தர்ப்பங்களிலும் காத்தான்.
நபியின் வாழ்க்கை வறுமையிலும் இனிமையாகவே இருந்தது..
நாங்கள் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளை பார்த்து விட்டோம்..நபியின்
வீட்டில் எதுவும் சமைக்கப்படவில்லை...உர்வா..
"நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்.".என்று ஆயிஷாவிடம் கேட்டார்.அதற்கு பேரீத்தம் பழமும் ,தண்ணீரையும் உண்டு வாழ்ந்தோம்.என கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்..பொறித்த ஆட்டுக் கறியை நபி(ஸல்) சுவைத்ததே இல்லை
(ஸஹீஹுல் புகாரி)
.
இப்படிப் பட்ட வறுமை வாழ்க்கையிலும் நேர்மை..கண்ணியம் தான் நபி சொல்லித் தந்த பாடங்கள்.
நபியவர்கள் பல திருமணங்களில் நாம் கற்றுக் கொள்ள ஏராள பாடங்கள் இருக்கின்றது..
தன் மனைவிமார்களிடம்
எவ்வளவு நீதமாக,
சரிசமமாக நடந்துக் கொண்டார்கள்..அதுபோல நாமும் நடக்க முடியுமா என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயங்கள்..
நபி(ஸல்) அவர்கள் எந்த சந்தர்பங்களில் எந்த காலகட்டங்களில் எதற்காக திருமணம் செய்தார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களின் தகுதியில் கொஞ்சம் கூட நமக்கு கிடையாது என்பதை புரிந்துக் கொண்டு அந்த வாழ்க்கையோடு நம்மை ஒப்பிட எந்த அருகதையும் இல்லை என்பதையும் அறிந்து கொண்டாலே தேவையற்ற சில சந்தேகங்களை தவிர்த்துக் கொள்ளலாம்..
கூடவே அது நபிகளின்
வாழ்க்கையை கண்ணியப் படுத்த,இஸ்லாத்தை பலருக்கும் எடுத்து வைக்க நபிகள் செய்த முயற்சி என்ற புரிதலும் கண்டிப்பாக தேவை.
நபி(ஸல்) அவர்கள் சராசரி மனிதர்களில் ஒருவராக இருக்கவில்லை. சாதாரண தலைவர்களில் ஒருவராகவும் இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின்
திருத்தூதராக தம்மை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் இறுதித்தூதர் எனப் பிரகடனப்படுத்தினார்கள்.
உலக முடிவு நாள் வரை தோன்றக் கூடிய எல்லா மனிதர்களுக்கும் அவர்களே வழிகாட்டியாகவும், அழகிய முன்மாதிரியாகவும் திகழ வேண்டியவர்களாகவும் இருந்தார்கள்.
அவர்களின் அந்த முன்மாதிரி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் ஒரு படிப்பினை கண்டிப்பாக இருக்கும்..
இனி,இக் கட்டுரையின்
முக்கியமான பகுதிக்கு
வருவோம்..
நபியின் பலதாரமணத்திற்கு
இறைவன் சில சிறப்பு சலுகைகளை வழங்கியிருக்கிறான்..
இதுவே நபியின் பலதாரமணத்திற்கு
விடை சொல்லும் கருத்தாக இருக்கிறது..
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம் அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்..(33:50)
நபிக்கு நிர்பந்தம் ஏற்படக் கூடாது என்பதற்காக சலுகை வழங்கியதாக இறைவனே மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான்..
இதிலிருந்து நபியின் திருமணங்கள் கூட இறைவனின் பொருத்தத்தில் நடந்ததை விளங்கி கொள்ளலாம்..
வாழ்க்கையில் "இல்லறம் " ஒரு "நல்லறம் " தான் என்பதை புரிய வைத்தது மாநபியின் இல்லற வாழ்க்கை என்றால் அது மிகையல்ல..
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்(33:56)
ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..
இறுதியாக...,
இஸ்லாத்தின் கொள்கைகளும்,
கோட்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பொருந்தி வருவதன்று..
இவ்வுலகம் உள்ள நாள் வரை இஸ்லாத்தின் போதனைகள் மாறாத ஒன்று தான்..
சில விஷயங்களில் நாம் நம்முடைய எல்லைக்குள் மட்டுமே நின்று சிந்திக்கிறோம்..
சிந்தனைகளை விரிவு படுத்தி பார்க்கும் போது இஸ்லாம் சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் உலக அளவில் பொருந்தி போவதை பார்க்கலாம்..
உலகில் நோய் கிருமிகளை எதிர் கொள்வதில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன..
இதனால் ஆண் குழந்தைகளின் மரணம் குழந்தை பருவத்தில் அதிகமாக உள்ளது..
நோய்களிலும்,விபத்துகளிலும் உயிரிழப்பவரின் எண்ணிக்கையும்
பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது..
உலக மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம்.அதனால் எல்லா பெண்களுக்கும் கணவன் அமைவது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று...
மேலும், விதவைகள் மறுவாழ்வு, முதிர் கன்னிகளை
வாழ வைப்பது..
இப்படி பல பொதுவான விஷயங்களை பலதாரமணத்திற்கு ஆதரவாக பலரும் முன் வைத்தாலும் சில எதார்த்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்..
துறவு வாழ்க்கையை மற்ற மதங்கள் ஆதரித்தாலும் அது ஒரு போலித்தனமான வாழ்க்கை என்பதை அன்றாடம் நடக்கும் உலக நிகழ்வுகள் நமக்கு பாடம் சொல்லி தருகின்றது..
இயற்கையோடு பொருந்தாத பொருந்தி வராத எந்த செயல்களுமே பெயரளவில் மட்டுமே சொல்லிக் கொள்ளப்படும்..
அதனுடைய இன்னொரு முகம் மிகவும் வெறுக்கத் தக்க ஒன்றாகத் தான் இருக்கும்..
கால ஓட்டங்கள் எவ்வளவு தான் வேகமாக ஓடினாலும் இந்த நாகரீக காலத்தில் மனதளவிலும்,உடலளவிலும் மனிதன் நிறையவே மாறி விட்டான்..ஆனால் சில இயற்கைக்கு முரணாக சில பழக்க வழக்கங்களை நிறுத்துவது போல் நடித்தாலும் அது ஒரு போதும் சாத்திய படாது..என்பது தான் உண்மை..
சந்தர்பங்களும்,சூழ்நிலையும் கூட சில நேரங்களில் மனிதனை தவறிழைக்க வைத்து விடுகிறது..
இறையச்சத்துடன் வாழ்பவர்கள் ஒரு சிலர் விதி விலக்காக இருந்தாலும் உண்மையில் இறைவன் வாக்கு
ஒரு போதும் பொய்யாகாது..
மனிதன் உண்மையிலேயே பலஹீனமானவன் தான்...
"இல்லறம் "வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
அதுவே ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்..என்ற உயர் கொள்கையை இஸ்லாம்
மிக தெளிவாகவே வலியுறுத்துகிறது..
மனைவியை பிடிக்காமல் கணவனும்,கணவனை பிடிக்காமல் மனைவியும் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு தங்கள் வாழ்க்கையை
முடித்துக் கொள்வது இன்றைய நடப்பில் சர்வ சாதரணமாக நடக்கிறது..
இப்படிப் பட்டவர்கள் மணவிலக்குப் பெற்று மறுதிருமணம் செய்துக் கொண்டு இல்லற வாழ்க்கையை இருவருமே சந்தோஷமாக தொடரலாம் என்பதற்கும் இஸ்லாம் உறுதுணையாக இருக்கிறது..
எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
"திருமணம்" செய்யாமல் கம்பானியனாக ரகசியமாகவோ,
வெளிப்படையாகவோ
வைத்து கொள்வதற்கு இஸ்லாத்தை தவிர எந்த மதத்திலுமே தடை இல்லை..
இப்படி தவறாக வைக்கப்பட்ட வாழ்க்கைப் பட்ட பல பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகவே ஆக்கப் பட்டு சீரழிக்கப்பட்டுள்ளது..
இது போன்ற சமூக அவலங்கள் நடைபெறுவதில்லை என்று யாராவது மறுக்க முடியுமா, பெண்களுக்கு அநீதி இழைக்கப் படவில்லை யாரவது சொல்லத் தான் முடியுமா..!?
எந்த சட்டத்தாலும்,எந்த மதத்தாலும் ஏன் அரசாங்கத்தால் கூட தட்டி
கேட்க முடியாத விஷயமல்லவா இது..
இது போன்ற நேரங்களில் இவர்களால் கைகட்டி அமைதியாக வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு என்ன செய்து விட முடியும்...
ஆனால் இஸ்லாம் மார்க்கத்தால் மட்டுமே இதற்கு சரியான பதிலடி கொடுக்க முடியும்..
காரணம் இஸ்லாத்தின் பார்வையில் இது "ஹராம்" இதற்கு "விபச்சாரம்" என்று பெயர்..இது தடுக்கப் பட்ட ஒன்று..
இஸ்லாம் காட்டி தந்த வழியில் அவர்களை தவறாக வைத்துக் கொள்ளாமல் முறையாக திருமணம் செய்து வைத்துக் கொள்ளும் போது பெண்களின் கண்ணியம் நல்ல முறையில் காக்கப்படுகிறது..அவர்களின் வாழ்வும் வளமாக்கப்படுகிறது..
இந்த எதார்த்த உண்மைகளை அனைவரும் சரிவர
புரிந்துக் கொண்டாலே
பலதாரமணம் கட்டாய கடமையல்ல அனுமதிக்கப் பட்ட ஒன்று தான் பெண்களை பாதுகாக்கும் ஒரு கேடயம் தான் என்பது அனைவருக்கும் தெள்ள தெளிவாக புரிய வரும் என்பது மட்டும் மறுக்க முடியா உண்மை...!!
No comments:
Post a Comment