Friday, July 14, 2017

பருவம்

பருவம் :
கோடை தணிந்து 
தென்றல் தவழ்கிறது 
வெடித்து சிரித்த நீ
சட்டென்று
நாணமுற்றதைப்போல்


என் இருளில்
நட்சத்திரங்களை
விசிறிச்சென்றவள்
கொடும் பகலில்
நிழலை 
விரித்து வைத்தவள்
தேவதைகளின் 
வழிவந்தவள்


ஊற்றுக்கண்ணில்
ஓடையில்
பெரும் பிரவாகத்தில் 
அருவியில்
ஆற்றுப்பாய்ச்சலில்
சத்தமின்றி சங்கமிக்கும் 
கழிமுகத்தில்
என்மீது 
நுங்கும் நுரையுமாக
நீ  

 பட்டென்று 
வெடித்து வெளியேறியது 
நீள் மூச்சொன்று 
ஒரு வழியாக 
நீ வந்த போது

சில கரையோர நாணல்கள் 
வருடி வழியனுப்பும்
சில பூக்கள் உதிர்ந்து
கூட வரும் 
நதியின் கடன் என்னவோ 
ஓடிக்கொண்டேயிருப்பதுதான்


 எதுவும் சரியில்லை
என்பதற்கும்
எல்லாம் சரியாக இருக்கிறது 
என்பதற்கும்
நடுவிலிருக்கிறது 
நாம் 
ஒத்துக்கொள்ள விரும்பாத 
நிஜம்


முரளி அப்பாஸ் (Murali Appas)அவர்களுக்கு முகம்மது அலியின் வாழ்த்துகள் 
கலைத் துறையில்(சினிமா) திரைப்பட இயக்குனர் முரளி அப்பாஸ் (Murali Appas)
இதற்கு முன் திரு. மணிரத்த்னம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்
About : Murali Appas Worked at Film Industry
film director in tamil and tamil film industry Studied at chennai film industrial school
thiyagaraja madurai and covt high school Lives in Chennai, Tamil Nadu From Pudukkottai

அன்புடன், 
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

No comments: