ஆதி, பரணி என ஆண்கள் தான் என்னால் இங்கே வசிக்க முடியவில்லை, தயவு செய்து விட்டு விடுங்கள் என தெறித்து ஓடினார்கள். ஆண்களின் இயல்பே இதுதான், பிரச்னைகளில் இருந்து தெறித்து ஓடுவது.. பெண்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள முனைபவர்கள். ‘’இவ்ளோதானா, இன்னும் இருக்கா பார்த்துடலாம்’’ என்னும் சர்வைவல் குணம் பெண்களின் ஆதிகுணம்...
ஆண்கள் தன் வீட்டில் மனைவி, குழந்தைகள் அல்லது அப்பா, அம்மா.. அவர்கள் அல்லாத பட்சத்தில் நண்பர்கள் இப்படியான ஒரு செட்டப் இருந்தால் மட்டுமே சகஜமாக இருக்கிறார்கள். வீடு இல்லாத, தன்னைக் கவனித்துக் கொள்ள ஆள் இல்லாத இடங்களில் மிக சிரமப்படுகிறார்கள். வீடு அவர்களின் மிகப்பெரிய கம்ஃபர்ட் சூன்.. பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி எங்கு வசித்தாலும் இயல்பாக, சகஜமாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டை பெரிதும் மிஸ் செய்வதே இல்லை.. எங்கும், எப்போதும் தனித்திருக்க அவர்களால் முடிகிறது..
அப்புறம் ஏன்யா ஆண்களை தைரியசாலின்னும், பெண்களை பயந்தாங்கொள்ளின்னும் சொல்றீங்கோ? ;)
Priya Thambi
No comments:
Post a Comment