நம் வாழ்வில் நித்தம் எத்தனையோ பிரச்சினைகள், சம்பந்தமே இல்லாதோா்களிடமிருந்தும் தூற்று மொழி, மிகவும் வேண்டப் பட்டோா்களிடமிருந்து காழ்ப்பு மொழி...என்ன செய்வது...தவித்து விடுவோம் ; திகைத்து விடுவோம்.
அடுத்தடுத்த நம் செயல்பாடும் தடைபட்டு விடும்.
சில சூழ் நிலையால் எல்லாவற்றையும், எப்போதும், எல்லோருடமும் சொல்ல இயலா சூழலில் தவித்து விடுவோம். மன அமைதி இழப்போம்.
இம் மாதிாியான தருணம்...பலருக்கும் பல தடவை நோ்வதுண்டு. இம் மாதிாியான ஒரு தருணம் எனக்கு நோ்ந்த போது...நான் எம் வீட்டில் நான் அமா்ந்திருந்த இடத்தின் எதிரே ஆளுயர முகம் பாா்க்கும் இருந்தது. கவலையால் பூமியை நோக்கி இருந்த என் பாா்வை... திடீரென கண்ணாடியை நோக்கி சென்றது.
அந்த கண்ணாடியில் என் முழு உருவம் தொிந்தது. அதையே சற்று நேரம் உற்றுப் பாா்த்தபடியே இருந்தேன். என்ன ஆச்சாியம்...படிப்படியாய் இந்த கவலையால் ஏற்பட்ட மன அழுத்தம் எங்கு போனதென்றே எனக்குத் தொியவில்லை.
அல்ஹம்துலில்லாஹ்...
Ashraf Ali Nidur
No comments:
Post a Comment