Gajini Ayub
Mohamed Ali Jinnah ( Mohamed Ali )மாமா அவர்கள் ! ( வலதில் அவரது நண்பர் டாக்டர் வாஹித் ஹாங்காங்)
அறிவார்ந்த சமூகத்தில் முக நூலில் வயது வித்யாசமின்றி ஆயிரக்கணக்கணக்கான நண்பர்களை பெற்றவர்.
சென்னையில் நான் முக நூலில் பிரசித்தம்பெற்ற ரஹீம் கஸாலியை சந்தித்தபோதும் நீடூர் பதிவாளரும் முக நூல் முன்னோடியுமான இவர் எனக்கு தனிப்பட்ட மரியாதைக்குரியவர் என்றார்.
முக நூலில் பழகும் நண்பர்கள் நீடூர் வர நேரிடும்போது முதலில் சந்திக்க தேடுவதும் இவரைத்தான் என்பதும் மகிழ்வான செய்தி.
உள்ளும் புறமும் என்ற பொய்மைத்துவம் இவரின் எழுத்துக்களில் இருக்காது. சமூக நல்லிணக்கம், மத, இன உணர்வுகள் களைந்த பொது சமூக கருத்துக்களே இவர் எழுத்தின் சாரத்தின் வெளிபாடுகள்.
வெகு வருஷங்களாக seasons என்ற இணைய தள பக்கமொன்றை இயக்கி வருவது இவரது இலக்கிய ஈடுபாட்டின் இன்னொரு பக்கம்.
எல்லோர்க்கும் நல்லவர் எனும் பெரும்பேற்று மனிதராக மதிக்கப்படும் இந்த வக்கீலுக்கு படித்தவர் அமைதியும் மென்மையும் எனது சுபாவமென்று தன்னை முக நூலில் அடையாளப்படுத்திகொண்ட பெருமகனாவார்.
No comments:
Post a Comment