பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 76. 'நவீன ஐன்ஸ்டீன்' என்ற அறிவியல் உலகில் அழைக்கப்படும் ஸ்டீபன் ஹாக்கங்கின் மறைவு குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
Raajaachandrasekar
அவரின் ஆழமான ஒரு சிந்தனை நினைவில் வந்து போகிறது.
"எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல; என்ன மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம்."
பழந்தமிழன்
"Stephen Hawking"
வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" - ஸ்டீபன் ஹாக்கிங்
மய்யம்
Stephen Hawking என்பது பெயரல்ல இயற்பியல் சித்தாந்தம்
மஞ்சள் நிலா
எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம்,
அங்கு எப்போதும்..உங்களால் செயல்பட மற்றும் வெற்றிபெற முடிந்த ஏதாவது இருக்கும்!!
ஆனந்த்
என் வாழ்க்கையில் உங்கள் வரவு....ஒரு மிருத்தியுஞ்சய பயணம்... யாராலும் வெல்ல முடியாத காலத்தை வென்று ....அதை முன்னும் பின்னும் அமைத்தவர் தாங்கள்.. ஆதியும் அந்தமும் முற்றும் அற்றுப்போன பிரபஞ்சமே உங்கள் சிந்தையில் ஒரு காற்புள்ளி...
நன்றி : மேலும் படிக்க http://tamil.thehindu.com
No comments:
Post a Comment