உம்மம்மாக்களின்
உடல் சுருக்கங்கள் அத்தனையும்
அனுபவ வரிகள் !
உம்மாக்களின்
செல்லக் கோபங்களெல்லாம்
பாசக் கோடுகள் !
இல்லாளின்
இன்முகம்
இலக்கியம் !
பிள்ளைகளெல்லாம்
கவிதை முத்துக்கள் !
பேரப்பிள்ளைகள்
புதுக் கவிதைத் தொகுப்புகள் !
இந்த
கவிதை நூலகங்களை
பாதுகாக்கும் நூலகன்
குடும்பக் கிழவன் !
No comments:
Post a Comment